9 12 2022

கன்னியாகுமரி மணக்குடி காயல்பகுதியில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளுக்கு குறிப்பட்ட காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றன.
இனப்பெருக்கம், இரை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களுக்காக இந்தப் பறவைகள் இங்கு வருகின்றன.
முந்தைய காலங்களில் இந்தப் பகுதிகளுக்கு அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்று வந்தநிலையில் அண்மையில் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துவருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை சார்ந்த ரோசி ஸ்டார்லிங் என்ற மைனா போன்ற வடிவிலானபறவைகள் அதிக அளவில் மணக்குடி காயல் பகுதிக்கு வருகை தந்துள்ளன.
இந்தப் பறவைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள குளிர் காலத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. அவை தன் இனப்பெருக்க காலமான குறுகிய காலத்தை ஐரோப்பிய நாடுகளில் கழித்துவிட்டு, மீதமுள்ள காலத்தில் இரைக்காக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தருகின்றன.
அவ்வாறு தற்போது இங்கு வந்துள்ள இந்தப் பறவைகள் பகல் நேரங்களில் பல பிரிவுகளாக பிரிந்து வயல்கள், நீர்நிலைகள் போன்ற பகுதிகளுக்கு இரை தேட சென்று விட்டு மாலை நேரங்களில் இங்கு உள்ள மரங்களில் வந்து அடைகின்றன. பின்னர் அதிகாலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக பூச்சிகள் மற்றும் இந்தப் பகுதியில் உள்ள பழங்களை உணவாக உட்கொள்ள தேடி சென்று விடுகின்றனர்.
கார்த்திகை மாதங்களில் பூச்சிகள் அதிகமாக காணப்படுவதால், இந்த பயிர்களை அழிக்கும் பூச்சிகளை உண்பதற்காக வயல்வெளிகளுக்கு சென்று பூச்சிகளை உண்ணுகின்றன.
விவசாயிகளுக்கு பிரச்னை கொடுக்கும் இந்த பூச்சிகளை இந்த பறவைகள் தின்பதால் இந்த பறவைகளை விவசாயிகளின் நண்பன் என்று அழைப்பர். அவ்வாறு மாலையில் இங்கு வரும் இந்த பறவைகள் அலை அலையாய் அழகிய வடிவங்களில் நடனமாடியவாறு இந்த பகுதிகளில் வட்டமடித்து இங்குள்ள மரங்களில் வந்தடைகின்றன.
இதன் இந்த அழகிய நடனத்தை ரோஸி ஸ்டார்லிங் மர்முரேஷன் என்று அழைக்கின்றனர். இந்த நடனம் உலக அளவில் அதிகமாக பேசப்பட்டு அதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கன்னியாகுமரியில் வெளிநாட்டு பறவைகள்
தற்போது மணக்குடி காயில் பகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இவற்றைக் காண இந்தப் பகுதியில் உள்ள மக்களும் சுற்றுலா பயணிகளும் மாலை நேரங்களில் இங்கு வருகை தருகின்றனர்.
இது குறித்து விலங்கின ஆர்வலர்கள் கூறும்போது முன்பெல்லாம் வெளிநாட்டு பறவைகள் அந்தந்த கால கட்டங்களில் இங்கு வந்து தங்கி விட்டு சென்றன.
ஆனால் தற்போது அவை வாழ்வதற்கான சூழல் படிப்படியாக அழிந்து வருகிறது. இதனால் குறைந்த அளவிலான பறவைகளே இங்கு வந்து செல்கின்றன.
இதனால் மத்திய மாநில இந்தப் பறவை இனங்களின் வருகையை அதிகரிக்க அவை வாழக்கூடிய இடங்களை மீட்டு பாதுகாக்க வேண்டும்” என்றனர்.
இந்த ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் மணக்குடி பகுதியில் இருந்து கூட்டமாக இரை தேட பறக்கும்போது ஒருவிதமான ஒலியை எழுப்பும். இந்த ஒசை அழகிய இசையாக காதுகளில் ஒலிக்கும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/there-is-a-demand-to-protect-foreign-birds-camped-in-kanyakumari-555377/