சனி, 10 டிசம்பர், 2022

ஆன்லைன் சூதாட்டம்.. பொள்ளாச்சியில் இளைஞர் தற்கொலை

 

09 12 2022

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22).
இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில், நண்பர்களிடம் கடனாக பணப்பெற்று ஆன்லைனில் சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிணத்துக்கு போலீசார் சல்மான் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்


source https://tamil.indianexpress.com/tamilnadu/online-gambling-youth-suicide-in-pollachi-555616/

Related Posts: