ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பெஸ்ட் சாய்ஸ்! Part 2

 பிளஸ் 2-வுக்குப் பிறகு: கத்தியின்றி, ரத்தமின்றி சாதிக்க... பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பெஸ்ட் சாய்ஸ்!

மருத்துவம், இன்ஜினியரிங் துறையில் பல்வேறு வகையான படிப்புகள் உள்ளன. பொதுவாக இன்ஜினிரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் மட்டுமே பெரும்பாலும் அறிந்து துறைகளாக இருக்கிறது.
இதை தவிர்த்து பல்வேறு வகையான இன்ஜினிரிங் படிப்புகள் கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் (Biomedical Engineering) துறை குறித்து காணலாம்.
மருத்துவம் மற்றும் உயிரியல் துறையுடன் இணைந்து இன்ஜினியரிங் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமான செயல்பாடுகளை கொண்ட கருவிகளை வடிமைப்பதே பயோமெடிக்கல் இன்ஜினியரிங்.
பொறியியல் படிப்பிற்கும், மருத்துவ படிப்பிற்கும் இடையே ஒரு பாலமாக ‘பயோமெடிக்கல் இன்ஜினியரிங்’ உள்ளது என்றும் சொல்லலாம். மருத்துமனைகளில் நாம் பார்க்கும் ஸ்கேனிங், இ.சி.ஜி., அல்ட்ராசவுண்ட் போன்ற இயந்திரங்கள் எல்லாம், பயோமெடிக்கல் இன்ஜினியர்களின் படைப்புகள்தான்.
தற்போதைய மருத்துவ உலகில் அதி நவீன கருவிகளான இசிஜி., இஇஜி., இஎம்ஜி., ரத்த மூலக்கூறுகளை கண்டறியும் சென்சார்கள், சிடி. மற்றும் எம்ஆர் ஸ்கேனர்கள், மெக்கானிக்கல் ரெஸ்பிரேட்டர், கார்டியாக் பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் மூலம் வடிவமைக்கப்பட்டவை.
எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சைகளையும் ரத்தம் இன்றி கத்தியின்றி சாத்தியம் என்றால் அதற்கு காரணம் பயோமெடிக்கல் துறைதான்.
பாடப்பிரிவுகள்:
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் வேதியல், இயற்பியல், கணிதம், கம்யூட்டர் சயின்ஸ் என பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. எனவே பயோமெடிக்கல் பயில விரும்புவோர் பேசிக் சயின்ஸ் மீது ஆர்வம் கொண்டிருப்பது அவசியம்.
பல்வேறு கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் முற்றிலும் மாறுபடும் எனவே சிலபஸ் என்றழைக்கப்படும் பாடப்பிரிவுகளை முற்றிலும் படித்து அறிந்த பின் விண்ணப்பிப்பது புத்திசாலித்தனம். பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை பல்வேறு வகையான உட்பிரிவுகளை கொண்டது.
பயோ இன்ஸ்ட்ருமென்டேஷன்:
இத்துறையானது எலக்ட்ரானிக் உதவியுடன் உரிய அளவுகோலை கொண்டு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவுகிறது.
பயோ மெட்டீரியல்ஸ்:
மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான செயற்கை உடல் உறுப்புகளை இத்துறை இன்ஜினியர்கள் உருவாக்குகின்றனர்.
பயோ மெக்கானிக்ஸ்:
உயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கு மெக்கானிக்கல் அப்ளிகேஷனை பயன்படுத்துவதாகும். இதன் மூலம் எலும்புமுறிவு, பேஸ்மேக்கர் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.
செல்லுலார் இன்ஜினியரிங்:
மனித உடலில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான அனைத்தும் அறியலாம்.
டிஸ்யூ இன்ஜினியரிங்:
திசுக்கள் வளர்ச்சி, திசுக்களை பேணுதல் போன்றவற்றின் மூலமாக நோய்களை குணமாக்கலாம். பெரும்பாலும் சிறுநீரக குறைபாடு தொடர்பான நோய்கள் இதன் மூலம் சரி செய்யபடுகின்றன.
ஜெனிடிக் இன்ஜினியரிங்:
மரபு வழிப்பண்பியல் பற்றி அறியலாம்.
கிளினிக்கல் இன்ஜினியரிங்:
மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் பிற உபகரணங்கள் பற்றி விரிவாக பயிலலாம்.
ஆர்த்தோ பீடிக் பயோஇன்ஜினியரிங்:
எலும்பு, நரம்புகள், இணைப்புகள், தசைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்டறிந்து அதற்கேற்ப செயற்கையான எலும்புகள், இணைப்புகள் தயார் செய்தலை பற்றி விளக்கும் பிரிவாகும்.
நேவிகேஷன் சிஸ்டம்ஸ்:
இத்துறை பயோ இன்ஜினியர்கள் கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் மனித உடலின் உறுப்புகளின் டிஜிட்டல் படங்களை உருவாக்குகின்றனர். இம்முறை நவீன லேசர் தொழில்நுட்பங்களில் உதவுகிறது.
இளநிலைப் படிப்புகள்:
பயோ இன்ஜினியரிங் துறையில் பி.இ., பி.டெக். எம்.எஸ், எம்டெக் போன்ற படிப்புகள் உள்ளன. இதைப்பயில பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
படிப்புகள் வழங்கும் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியல்:
* என்ஐடி, ராய்பூர்
* என்ஐடி, ரூர்கேலா
* டிஎஸ்இசி, மும்பை
* டி.ஜே. சங்கவி இன்ஜினியரிங் காலேஜ், மும்பை
* எஸ்எஸ்என் இன்ஜினியரிங் காலேஜ் (அண்ணா பல்கலைக்கழகம்)
* பி.எம்.எஸ். இன்ஜினியரிங் காலேஜ், பெங்களூர்
* விஐடி, வேலூர்
* மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூர்
* பாரதி வித்யாபீத், புணே
* பி.எம்.எஸ். இன்ஜினியரிங் காலேஜ், பெங்களூர்
* எம்.எஸ். ராமையா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பெங்களூரு
* ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், புதுடில்லி (www.aiims.ac.in )
* பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், வாரனாசி, உத்தரபிரதேசம் (www.itbhu.ac.in )
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள்:
* பி.எஸ்.ஜி.,காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை (http://www.psgtech.edu )
* சத்தியபாமா பல்கலைக் கழகம், சென்னை (http://www.sathyabamauniversity.ac.in/ )
* ஆறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை (http://www.avit.ac.in/index.html )
* ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, கோவை (www.srec.ac.in/ )
* ராஜராஜேஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை (http://www.rrec.ac.in/courses.htm )
* ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், கோல்கட்டா (www.jadavpur.edu )
முதுநிலை படிப்புகள்:
இன்ஜினியரிங் படிப்பில் இசிஇ., இஇஇ., இ அண்டு ஐ படித்தவர்களும் இத்துறையில் பட்ட மேற்படிப்புகளை படிக்கலாம். பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்கள் அதில் பட்ட மேற்படிப்புக்குப் பின் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படித்தும் இந்தத் துறையில் நுழையலாம்.
பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகள்:
* ஐஐடி பம்பாய் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
* ஐஐடி பிஹச்யு - எம்டெக்
* ஐஐடி ஹைதராபாத் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
* ஐஐடி கான்பூர் (எம்டெக் மற்றும் பிஹச்டி)
* ஐஐடி கரக்பூர் (எம்.டெக் இன் மெடிகல் இமேஜிங் அண்ட் இமேஜ் அனலிசிஸ்)
* ஐஐடி மெட்ராஸ் ( எம்டெக் அப்லைடு மெக்கானிக்ஸ் வித் ஸ்பெஷலிஷேஸன் இன் பயோமெடிக்கல் இன்ஜினிரிங் )
* ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூர் (இண்டர் பிசினரி பயோ இன்ஜினியரிங் பிஹச்டி)
* எம்என்ஐடி, அலாகாபாத் (எம்டெக்)
* என்ஐடி, ரூர்கேலா (எம்டெக் & பிஹச்டி)
* மானிப்பல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.டெக் இன் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) சிஓஇபி ( எம்.டெக் இன் பயோமெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
* எஸ்சிடிஐஎம்எஸ்டி, திருவனந்தபுரம் (எம்எஸ் மற்றும் பிஹச்டி பயோ இன்ஜினியரிங்)
வேலை வாய்ப்புகள்:
இந்தவகையான படிப்புகளுக்கு இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக மவுஸ் உண்டு. ஹெல்த்கேர், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம். இதில் பல்வேறு நிலைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பயோமெடிக்கல் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாகக் கிடையாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டில் இந்த துறைக்கு வரவேற்பு அதிகம். ஜப்பான் மற்றும் சீனா போன்ற பிற நாடுகளும் இந்த துறையில் சிறந்து விளங்குவதோடு வேலைக்கேற்ற சம்பளம் வழங்குகின்றன.
பணி வழங்கும் முண்ணனி நிறுவனங்கள்:
* எல் அண்ட் டி
* ஸ்ட்ரைக்கர் குளோபல் டெக்னாலஜி சென்டர்
* டெலோயிட் கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்
* டெக்ஸாஸ் இன்ரூமென்ட்.
* பிலிப்ஸ் ஹெல்த்கேர்
* ஆர்பெஸ் மெடிக்கல்
* சீமன்ஸ்
இது மட்டுமல்லாது அரசு நிறுவனங்களுக்கு பயோ இன்ஜினியர்கள் தேவைப்படுவதால் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம். ஆண்டிற்கு 3 முதல் 3.5 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். இதுவே வெளிநாட்டில் முற்றிலும் மாறுபடும்.
இந்தியாவில் உள்ள பயோ இன்ஜினியரிங் ஆராய்ச்சி மையங்களின் பட்டியல்:
* டிபார்ட்மென்ட் ஆப் பயோ சயின்ஸ் ஐ.ஐ.டி பம்பாய்,
* சென்டர் பார் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி,தில்லி.
* ஸ்கூல் ஆப் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி,பிஎச்யு
* டிபார்ட்மென்ட் ஆப் பயோ மெடிகல் இன்ஜினியரிங் ஐஐடி ஹைதராபாத்,
* டிபார்ட்மென்ட் ஆப் அப்ளைடு மெக்கானிக்ஸ், சென்னை ஐஐடி
*டிபார்ட்மென்ட் ஆப் பயோமெடிக்கல் இன்ஜினியரிங், ஐஐடி ரோபர்
* டிபார்ட்மென்ட் ஆப் பயோ இன்ஜினியரிங், சிஎம்சி, வேலூர்
* இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், பெங்களூர்
* ஜெனரல் எலக்ட்ரிக் குளோபல் ரிசர்ச், பெங்களூர்

கல்வி உதவித்தொகை

 


#துணை_மருத்துவப்_படிப்புகள்!! பாகம்-1

 #துணை_மருத்துவம்_இன்றி_மருத்துவம்_இல்லை!!

வெளியீடு:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹீ...
அன்பான மாணவ மாணவிகளே, பெற்றோர்களே நோய் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆற்றலுடன் மக்களை சந்திக்கிறது அந்த நோய்யை எதிர்த்து மருத்துவ துறையும் அந்தந்த காலகட்டத்தில் மருந்து கண்டுபிடித்து நோய்களை அழித்து வருகிறது. இஸ்லாமியர்களின் முக்கியமான ஒரு நம்பிக்கை எல்லா நோய்களுக்கு மருந்து உண்டு என்பது இதை முஹம்மது நபி (ஸ்ல) அவர் தெளிவாக கீழே பதிவு செய்துள்ள ஹதீஸில் கூறியுள்ளார்கள்.
*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் ஸஹீஹ் புகாரி - 5678.*
அப்படியனில் எல்லா நோய்களுக்கும் இவ்வுலகில் மருந்து இல்லாமல் இல்லை அனைத்து நோய்க்கும் மருந்து உண்டு. அதை மருத்துவ துறை தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிகின்றனர் இறைவனின் அருளால்.
* நாம் தற்போது உள்ள 2020 காலசூழல் மிகவும் சோதனையான காலகட்டம் ஏன் என்றால் தற்போது உலகத்தையே ஆட்டிபடைக்க கூடிய ஒரு நோய் COVID-19 உள்ள காலசூழலில் உள்ளோம். இந்த நோயின் மூலம் உலகில் உளள் அனைத்து துறையினரும் மிக பெரிய படிப்பினையை பெற்றுள்ளோம். மருத்துவதுறை, சுகாதாரத்துறை, பாதுகாப்புதுறைக்கு சவாலான நோயாக உள்ளது. இதில் மிகவும் அற்பனிப்பு மற்றும் சேவை மணப்பான்மையுடன் உயிரை துச்சமென மதித்து பணி செய்யும் மிக உன்னதானமான பணி தான் இந்த மருத்துவ மற்றும் துணைமருத்துவ பணி இந்த தூய பணியின் கல்வி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகள் படிக்க 11ஆம் வகுப்பில் Biology, Physics & Chemistry / Botany, Zoology, Physics, & Chemistry - உயிரியல், இயற்பியல் & வேதியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், இயற்பியல் & வேதியியல் ஆகிய பிரிவுகள் எடுத்து படித்தால் மட்டுமே இந்த துறையை தேர்ந்துதெடுக்க முடியும் ஒரு சில மருத்துவ படிப்பை தவிர.
#நீட்_தேர்வு_இல்லை - துணை மருத்துவ படிப்புகளுக்கு
இந்த ஆண்டும் துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கிடையாது தமிழக அரசின் இட ஒதுக்கீடு முறை தான் பின்பற்றபடும்.
பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப அப்லிகேஷன்
www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட 18 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஆரம்பம் செய்தனர், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கலாம்.
துணை மருத்துவ படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 600 -க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 7,500 -க்கு மேற்பட்ட இடங்களும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாக இடங்களும் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமையுள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகல்களைக் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
*சேர்க்கை & கூடுதல் விபரங்களுக்கு கீழ் கானும் முகவரியை அனுகலாம்*
Selection Committee
Directorate Of Medical Education
#162, Periyar E.V.R. High Road, Kilpauk, Chennai-600010
ஈமெயில் selmedi@yahoo.co.in,
தொலைபேசி +044-28361674
உதவி எண்கள் 9884224648, 9884224649, 9884224745, 9884224746
தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழகம்
59, ன அண்ணாசாலை, கிண்டி, சென்னை - 600032
ஈமெயில் - mail@tnmgrmu.ac.in
தொலைபேசி +91 44 22353574 /22353093
இணையதளம் - www.tnmgrmu.ac.in
*அ‌ரசு கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்பு கட்டணங்கள் - சிறு மாற்றம் இருக்காலம்*
துணை மருத்துவ படிப்புகளை பொறுத்தவரை
#‌ B.Pharm க்கு அரசு கல்லூரிகளில் அதிகபட்ச கட்டணம் ஆண்டுக்கு 4,000 மட்டுமே.
# B.Sc நர்சிங் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கட்டணம் 40,000 மட்டுமே
# BPT அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கட்டணம் 33,000 மட்டுமே
# BOT அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கட்டணம் 33,000 மட்டுமே.
# நல்ல மதிப்பெண் எடுத்து அரசு கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளை படிப்பதால் ஏழை எளிய மக்களுக்கு தங்களின் மருந்து துரை சார்ந்த கணவை இலகுவாக குறைந்த செலவில் பெற முடியும். தனியார் கல்லூரியை காட்டிலும் அரசு கல்லூரிகளில் படிப்பதே சிறந்தது. ஏனெனில் அரசு கல்லூரிகளில் ஒரு சில படிப்புகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.
1) B.Sc Nursing
2) B.Pharm - Pharmacy
3) B.P.T - Physiotherapy
4) B.O.T - Occupational Therapy
5) B.Optom - Optometry
6) B.Sc Radiology & Imaging Tech
7) B.Sc Radio Therapy Technology
😎 B.Sc Medical Lab Technology
9) B.Sc Dialysis Technology
10) B.Sc Operation Theatre & Anesthesia Technology
11) B.Sc Cardiac Pulmonary Perfusion Technology
12) B.Sc Respiratory Therapy
13) BASLP Audiology & Speech Language Pathology
14) Medical Record Technician
15) Cardiac Thechnology
16) Accident & Emergency Care Technology
17) Physician Assistant
18) Critical Care Technology
19) Nuclear Medicine Tech
20) Dental Hygiene
21) Dental Mechanic
22) Dental Technician
23) Radiographic Assistant
24) Rehabilitation Therapy
25) Blood Transfusion Tech
இது போன்ற இன்னும் ஏராளமான துணை மருத்துவ படிப்புகள் உள்ளது இதில் நமது திறமைக்கு ஏற்றார் போல் ஒரு துறை தேர்நதெடுத்து துறை சார்ந்த வல்லுநர் ஆகலாம்.
# மருத்துவ துறை உயிர் காக்கும் துறை என்பதால் இந்தியாவில் மருத்துவமனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் உலக தரத்தில் வளர்ந்துள்ளன. அதிலும் தமிழகம் மருத்துவ துறையில் சிறந்த விளங்கும் பகுதி.
# மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அதிக மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.
# உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ கட்டணங்கள் குறைவு என்பதால் வெளி நாட்டினர் பலரும் மருத்துவ சிகிச்சை பெற இந்தியா வருகின்றனர்.
# எனவே இந்தியாவில் மருத்துவர்களுக்கு இணையாக மருத்துவ பணியாளர்கள் தேவை படுகின்றனர்.
# நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை துணை மருத்துவ படிப்பு படித்தவர்கள் தேவை அதிகம் உள்ளது.
# மேலும் வெளி நாடுகளில் இந்தியர்களுக்கு அதிகம் வேலை வாய்ப்புகள் உள்ளன.
# மருத்துவ துறையில் பட்ட படிப்புககளுக்கு மட்டுமின்றி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும் தேவை அதிகம் உள்ளது.
# மருத்துவமனைகள் மட்டுமின்றி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்புகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
# பிற துறைகள் போல் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு காத்திருக்கும் நிலையோ அல்லது அரசு பணியை மட்டும் தேடிடும் நிலையோ இப்படிப்புகளுக்கு இல்லை.
# சுருங்க கூறின் இப்படிப்புகள் படித்தோர் படிப்பை முடித்த அடுத்த ஆண்டு ஏதாவது ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது.
# ஆகவே இப்படி ஏராளமான வாய்ப்புகள் உள்ள துணை மருத்துவ படிப்புகளை தவரவிட்டு விடாதீர்கள் மாணவ செல்வங்களே.
# M.Pharm
# M.P.T - Master Of Physiotherapy
# M.Sc - Surgical Nursing
# M.Sc - Community Health Nursing
# MBA In Hospital & Heatlh Care Management
# Master In Sports Physiotherapy
இன்னும் ஏராளமான முதுநிலை துணை மருத்துவ படிப்புகள் உள்ளன அதில் சிலவற்றை மேல குறிபிட்டுள்ளோம்.
உலக நாடுகளில் துணை மருத்துவ உட்பிரிவு விரிவாகி கொண்டே போகிறது ஒவ்வொரு துறையிலும் உட்பிரிவு என்பது நீண்டு கொண்டே போகிறது ஆகையால் துணை மருத்துவ கல்வியறிவு என்பது வருங்காலங்களில் மிகப்பெரும் அசாத்திய நிகழ்வுகளை கொண்டதாக இருக்கும். இருதயத்தை மாற்றி அமைக்க கூடய காலகட்டம் தாண்டி மனிதனால் மாற்றி அமைக்க முடியாத உறுப்புகளையும் மாற்றி அமைக்கும் சிகரத்தை நோக்கி பயனிக்கிறது எதிர்கால மருத்துவம் அப்படிபட்ட சூழலில் துணை மருத்துவம் இல்லாமல் இவை எதுவும் சாத்தியம் இல்லை என்பது தான் உண்மை.
# இதுநாள் வரை அறிவியல் துறை மாணவ மாணவிகள் திட்டமிடாமல் இருந்தால் அதை புறம்தள்ளி தற்போது உள்ள காலசூழலுக்கு ஏற்ப ஒரு நல்ல துறை உடனடியாக தேர்தெடுத்து வையுங்கள்.
# உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் நேரம் கடத்தாமல் செயலாற்றுங்கள் இறைவனின் அருள் நிச்சயம் உண்டு.
# துணை மருத்துவம் என்பது மிக உன்னதமான உயிர்காக்கும் பணி இந்த துறையில் லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு பொறுமையுடன், சேவை மணப்பான்மையுடன் செயல்படவேண்டும்.
# தற்போது உள்ள COVID-19 போன்ற உயிர் கொள்ளி நோய்களிலிருந்து மக்களின் உயிர் காக்கும் உயரிய பணி செய்ய நேரிடும்.
# அப்படி பட்ட நிலையில் சேவை மணப்பான்மையுடன் செயல்பட்டால்
# தற்போது COVID-19 யில் இருந்து மீண்ட நாட்டு மக்கள் தங்கள் நாட்டு மருத்துவ பணியாளர்களை மிகுந்த அன்புடன் மணபூர்வமாக கண்ணீருடன் பாராட்டினார்கள்.
# இது போல் உங்களை வருங்கால உயிர்காக்கும் பணியாளராக ஆக்கொள்ள துணை மருத்தவத்தை தேர்ந்தெடுங்கள்.
*அரசு சார்ந்த நிறுவனத்தில் இணைவது அல்லது அரசு கல்லூரி கிடைக்காமல் சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைத்தால் அதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
1. 400 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக +2 வில் பெற்ற மாணவர்கள் பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு கல்லூரிகளில் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைத்தாலும் சேர்ந்து கொள்ளலாம். ஏனெனில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
2. ஒரு வேலை கவுன்சலிங் மூலம் இடம் கிடைக்காது என தெரிந்தால் நர்சிங் மற்றும் பார்மசி படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து சுயநிதி கல்லூரிகளில் சேரலாம்.
3. படிப்பிற்கு ஆகும் செலவை கணக்கிட்டு தம்மால் இயலும் படிப்பில் சேர வேண்டும்.
4. சேரும் கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்து பின்னரே சேர வேண்டும்.
5. கட்டணம் அதிகம் கொள்ளை அடிக்கும் கல்லூரிகளில் சேராமல் புறக்கணித்து அரசு சார்ந்த ஏதாவது ஒரு துணை மருத்துவ துறையை தேர்ந்து எடுப்பது.
6. உள்ளூர்களில் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சேர வேண்டாம். ஏனெனில் இவை பெரும்பாலும் முறையான அரசு அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் வேலை பெற பயன்படாது. மேலும் அரசு பணிக்கு செல்ல இவை உதவாது.
7. புதிய கல்லூரிகளில் சேருவதாயின் அவற்றின் அங்கீகாரத்தை சரி பார்த்து பின்னரே சேர வேண்டும்.
8. நகர கல்லூரிகளில் படித்தால் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம்.
9. ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விசாரித்து சிறந்த தரமான கல்லூரியில் சேர்வது சிறந்தது.
10. மருத்துவம் சேர முயற்சித்து இடம் கிடைக்காத மாணவர்கள் அரசு கல்லூரிகளில் இப்படிப்புகளில் சேர இடம் கிடைத்தால் கண்டிப்பாக சேரலாம். ஏனெனில் அரசு பணி உத்திரவாதத்துடன் மருத்துவருக்கு அடுத்த சம்பளம் பெறும் வாய்ப்பு இப்படிப்புகளுக்கு உள்ளது என்பது இன்றும் தொடர்கிறது.
# மிக முக்கியமான தகவல் - இந்த கட்டுரையின் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் துணை மருத்தவ துறையில் உள்ள மிக முக்கியமான துறை சற்று விரிவாக பார்க்க இருக்கிறோம் இறைவன் அருள் செய்வானாக...
இன்ஷாஅல்லாஹ்...
ஜஸகல்லாஹுகைர்...
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” திருக்குர்ஆன் - 20:114*
ஆக்கம்:-
தி.மலை ரியாஸ்