செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு.

 3 4 2023Defamation case against Rahul Gandhi

சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த ராகுல் காந்தி

2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மார்ச் 23ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். தொடர்ந்து அவர் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் காந்தி இந்தத் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஏப்.13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக ராகுல் காந்திக்கு குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனால் சூரத் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது மோடி சமூகம் குறித்து தவறாக பேசியதாக புகார்கள் எழுந்தன.
இந்தப் புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/surat-court-grants-bail-to-rahul-gandhi-in-defamation-case-627469/