சனி, 8 ஏப்ரல், 2023

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்: இதற்கு மட்டும் அனுமதி மறுப்பு

 congress protest

பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் வரும் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டவும், கருப்பு பலூன்களை பறக்க விடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தகவலை அறிந்த சென்னை காவல்துறையினர், நேற்று இரவே மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்று அவர்களை வீட்டு காவலில் வைத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கருப்பு கொடி, மற்றும் கருப்பி பலூன்களை நேற்று இரவே பரிமுதல் செய்தனர்.

இந்நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த சென்னை காவல்துறை அனுமதி வழங்கியது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பு கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டம் நடத்திவருகின்றனர். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. ஆர்பட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தொண்டர்கள், தங்கள் உடலின் இரு புறங்களிலும் ‘go back modi’ என்ற வாசகத்துடன் போரட்டத்தில் ஈடுபடுகின்றனர். இரண்டு உதவி ஆய்வாளர்கள், 7 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதி வழங்கப்பட்டாலும், போரட்டத்தில் ஈடுபடும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கருப்பு பலூன் பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

8 4 23



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilandu-congress-protest-in-chennai-not-allowed-to-use-back-balloon-632271/