திங்கள், 17 ஏப்ரல், 2023

பேரணியில் பரபரப்பு: ராமநாதபுரம் தலைவரை தாக்க முயற்சி; கூலிப்படையா? என விசாரணை

 

உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் அரசு அனுமதி அளித்த 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்றது. ஊர்வலத்தின் போது குத்தி, லத்தி போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என டி.ஜி.பி உத்தரவிட்டிருந்தார்.

இதையொட்டி அனைத்து இடங்களிலும் ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணிமுருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தரணிமுருகேசனை இருவர் நோட்டமிட்டு வந்துள்ளனர். இதனைக் கண்டு சந்தேகமடைந்த தரணிமுருகேசன் ஆதரவாளர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு இவர்களை தாக்க முயன்று விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் பிடித்து தரணிமுருகேசன் ஆதரவாளர்கள் போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில் இருவர் சென்னை எண்ணூர் பகுதியின் கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மோகன் என்பதும் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பா.ஜ.க தலைவரின் தூண்டுதலின் பேரில் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 4 23 

source https://tamil.indianexpress.com/tamilnadu/2-held-for-trying-to-attack-ramanathapuram-bjp-leader-during-rss-rally-640277/