17 4 23
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மத்திய உபகரண அடையாளப் பதிவேடு (Central Equipment Identity Register – CEIR) என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன் உள்பட தொலைந்து போன எலக்ட்ரானிக் கேஜெட் பொருட்கள் IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) எண்ணுடன் பயனர்கள் விரைவாக புகார் அளிக்க அனுமதிக்கிறது. மேலும்
இந்த போர்ட்டல் உங்கள் தெலைந்து போன போனை பிளாக் செய்ய உதவுகிறது. அதோடு தெலைந்து போன போன் அல்லது திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கலாம், கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போனை அன்பிளாக் செய்யலாம்.
IMEI நம்பர்
KYM (know your mobile) என்ற செயலி இலவசமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் வழங்கப்படுகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வழங்கும். இது உங்கள் போன் IMEI எண், என்ன பிராண்ட் மொபைல், மாடல் எண் போன்ற விவரங்களை வழங்கும். பொதுவாக IMEI நம்பர் உங்கள் போன் பில் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும். பில் பெட்டி இல்லையென்றால் உங்கள் போனில் *#06# என டயல் செய்து ஓ.டி.பி பெற்று IMEI நம்பர் பெற்றுக்கொள்ளலாம்.
CEIR மூலம் எவ்வாறு புகார் அளிப்பது?
தற்போது, CEIR சேவை யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து 37 மாநிலங்களிலும் கிடைக்கிறது. தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட் போனைப் பற்றி புகாரளிக்க, மொபைல் எண், IMEI எண் மற்றும் போன் இன்வாய்ஸ் பில் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இதேபோல் நீங்கள் வசதிக்கும் இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். CEIR இணையதளத்தின் மூலம் உங்கள் தொலைந்து போன போனை பிளாக் செய்வதன் மூலம் மத்திய தரவுத்தளத்தில் உங்கள் எண் பிளாக் செய்யப்படும். பின்னர் அதைப் பயன்படுத்த முடியாது.
கிடைத்த மொபைலை அன்பிளாக் செய்வது எப்படி?
தொலைந்து போன மொபைல் போன் உங்களுக்கு கிடைத்தப்பின் CEIR இணையதளம் மூலம் அன்பிளாக் செய்யப்பட வேண்டும். விவரங்களை உள்ளிட்டு, அன்பிளாக் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிடுவதன் மூலம், CEIR இணையதளம் வழியாக அன்பிளாக் செய்யலாம்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-find-lost-or-stolen-phone-through-ceir-portal-640610/