தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 341 குளங்கள், 67 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.461 கோடி நிதிஒதுக்கீடு செய்து புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தை தொடங்கிட உலக வங்கி 70 சதவீத நிதியை கடனாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 30 சதவீத செலவுகளை தமிழக அரசு ஏற்கும்.
இத்திட்டத்தின் கீழ் பாலாறு, செய்யாறு, காவிரி, பெரியாறு என்று நீர்நிலைகளும் அணைகளும் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த பின், பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் விவசாயத்தையும், அதனால் விளையும் உற்பத்தியையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் கட்டமாக, உலக வங்கியின் ஆதரவுடன் காவிரி உட்பட சில குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை சீரமைக்க மேற்கொண்டுள்ளனர். மத்திய நீர்வள ஆணையம் மூலம் உலக வங்கிக்கு நிதிக்கான முன்மொழிவை அனுப்பியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-419-waterbodies-getting-restored-with-cost-of-461-crore-rupees-632000/