17 5 23
நாட்டின் மீதான சர்வாதிகாரத் தாக்குதலைத் தடுப்பதற்கான வழியைத் தேடுவதற்காக தக்ஷிண கன்னடா துணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸின் ‘40% கமிஷன் அரசு’ மற்றும் ‘பே சி.எம்’ பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்தார்.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது, 1989 முதல் மாநிலத்தில் அதன் சிறந்த செயல்திறனை உறுதி செய்ததற்காக அக்கட்சி வட்டாரங்கள் தங்கள் ‘பெயர் எஸ் எழுத்தில் தொடங்கும் 4 தலைவர்களுக்கு’ (4 எஸ்) பெருமை சேர்த்துள்ளன.
இந்த “4 எஸ்”களில் இரண்டு மாநில காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் அடங்குவர், மூன்றாவது தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு ஆவார்.
நான்காவது காங்கிரஸ் வெற்றியின் முக்கிய சிற்பிகளின் குழுவில் எஸ் எழுத்தில் தொடங்கும் நான்காவது எஸ் “44 வயதான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆவார். அவர் பெங்களூருவில் காங்கிரஸின் வாரு ரூமுக்கு தலைமை தாங்கினார். பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் ஊழலுக்கு எதிரான விவரனைகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
சசிகாந்த் செந்தில் உருவாக்கிய யோசனைகளின் அடிப்படையில், காங்கிரஸ் பா.ஜ.க-வை குறிவைத்து ஊழல் எதிர்ப்பு பிரச்சாரங்களைத் தொடங்கியது. குறிப்பாக அதன் ‘40 சதவீத கமிஷன் அரசாங்கம்’ திட்டத்தை மையமாகக் கொண்டது. இவற்றில் மிகவும் புதுமையானது ‘பே சி.எம்’(Pay CM) பிரச்சாரம் ஆகும்,. இதில் QR குறியீடு மற்றும் ‘பே சி.எம்’ என்ற தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு முழுவதும் பரவின. பொம்மையை தொடர்ந்து ஹைதராபாத் வரையிலும், ‘40 சதவீத கமிஷன் முதல்வர் வருக’ என்ற பதாகைகளுடன், தெலுங்கானா தலைநகருக்கு அவர் சென்றபோது அங்கும் சுவரொட்டிகள் வெளியாகின.
2009 ஆம் ஆண்டு பேட்ச் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், செப்டம்பர் 2019-ல் வகுப்புவாத உணர்வுள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆணையராக (டிசி) பணியாற்றியபோது, ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். “அரசாங்கத்தில் ஒரு அரசு ஊழியராக, நமது பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டுமானங்கள் முன்னோடியில்லாத வகையில் சமரசம் செய்யப்படும்போது” அவர் தனது கடமையில் தொடர்வது அறமற்றது என்று கூறினார்.
அப்போது சசிகாந்த் செந்தில் கூறுகையில், “வரும் நாட்கள் நமது தேசத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு மிகவும் கடினமான சவால்களை முன்வைக்கும் என்பதையும் நான் உறுதியாக உணர்கிறேன். மேலும், ஐ.ஏ.எஸ் பணிக்கு வெளியில் இருந்து அனைவரின் வாழ்க்கையை சிறப்பாக்க எனது பணியைத் தொடருவேன்” என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) / தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) முன்மொழிவை கடுமையாக விமர்சித்த சசிகாந்த் செந்தில், அவர்களுக்கு எதிராக போராடும் மக்களுடனும் செயற்பாட்டாளர்களுடனும் தொடர்புகொள்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். சித்தாந்தத்தால் சோசலிஸ்ட்டாக இருந்த சசிகாந்த் செந்தில் பின்னர் காங்கிரஸில் சேர முடிவு செய்தார்.
2020 நவம்பரில், தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். தான் எப்போதும் மக்கள் நலனுக்காக உழைத்ததாகவும், அவ்வாறு மக்கள் பணியில் தொடருவேன் என்றும் கூறினார். பின்னர், அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட ஒரு குறிப்பில், சசிகாந்த் செந்தில், அவர் மிகவும் நேசிக்கும் நாட்டின் மீதான சர்வாதிகாரத் தாக்குதலைத் தடுப்பதற்கான ஒரு முறையைத் தேடுவதற்காக ஐ.ஏ.எஸ் பணியை விட்டு வெளியேற முடிவு செய்ததாகக் கூறினார். அவர் ராஜினாமா செய்த பிறகு, அவர் பலரைச் சந்தித்தார், பல போராட்டங்களில் பங்கேற்றார், சி.ஏ.ஏ/என்.ஆர்.சி-க்கு எதிரான இயக்கங்களில் பங்கேற்றார். இது நாட்டில் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக ஒன்றாக நிற்கத் தயாராக உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது என்று கூறினார்.
ஆரம்பத்தில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின் மேலே இருந்து பணியாற்றினார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னையில் உள்ள கட்சியின் வார் ரூமில் பணியாற்றினார். அவரது பணியால் கட்சி ஈர்க்கப்பட்டதால், செப்டம்பர்-அக்டோபரில் அவரை பாரத் ஜோடோ யாத்திரையின் மூன்று வார கர்நாடக நடை பயணத்தில் ராகுல் காந்திக்கும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அவரை ராகுலுடன் நெருக்கமாக்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வலதுசாரி சக்திகளுக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு இருந்தபோதிலும், ஜூன் 2017 முதல் செப்டம்பர் 2019 வரை தக்ஷிண கன்னடா துணை ஆணையராக சசிகாந்த் செந்திலின் செயல்பாட்டின் ஒரு பகுதி பா.ஜ.க தொண்டர்களால் அவரது மக்கள் சார்பு நகர்வுகளுக்காகவும், மணல் மாஃபியா மற்றும் அவர்கள் தொடர்புடைய அரசியல் முதலாளிகளுக்கு எதிரான அவரது கடுமையான நடவடிக்கைகளுக்காகவும் பாராட்டப்பட்டார். வெள்ளத்தை அவர் கையாண்ட விதம் மக்களிடையே அவருக்கு மரியாதையை ஏற்படுத்தியது. மழையின் போது அடிக்கடி பள்ளி விடுமுறைகள் அறிவித்ததால் குழந்தைகள் அவரை விரும்பினர்.
காங்கிரஸ் தனது அரசியலில் இருந்த ஆழ்ந்த நுண்ணறிவை கருத்தில் கொண்டு சசிகாந்த் செந்திலை கர்நாடக வார் ரூமின் தலைவராக நியமித்தது. அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “சசிகாந்த் செந்தில் மற்றும் அவரது குழுவினர் காங்கிரசுக்கு பிரச்சாரங்கள் மற்றும் சமூக ஊடக உத்திகளை வகுக்க இரவும் பகலும் உழைத்தனர். இது 40% கமிஷன் அரசாங்கத்தை மாநிலம் தழுவிய வாக்கெடுப்பின் ஒரு பகுதியாக மாற்றியது. இந்த குழு அயராது பதிவுகளை உருவாக்கி, பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை உருவாக்கியது.” என்று கூறினார்.
சசிகாந்த் செந்தில் உடன் சுமார் 50 பேர் கொண்ட வலுவான குழு இருந்தது. அவர்களில் சிலர் சென்னை மற்றும் நாக்பூரிலிருந்து வந்தவர்கள். காங்கிரஸின் அறிக்கைகளை உருவாக்குவதற்கும் அதன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவர்கள் உதவினார்கள்.
2013-14ல் ராய்ச்சூர் துணை ஆணையராக இருந்த அவர், சில முக்கிய உள்ளூர் தலைவர்களை கட்சிக்குள் ஈர்ப்பதில் வெற்றி பெற்றதால் காங்கிரசுக்கு பலன் அளித்தார். பல எஸ்சி (இடது) தலைவர்களை பா.ஜ.க-வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவதில் அவர் பங்கு வகித்தார்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு, செந்தில் மீண்டும் தமிழகம் சென்று காங்கிசுக்காகப் பணியாற்றினார். இதனால், நாட்டின் பெரிய, பழமையான காங்கிரஸ் கட்சி அவரை அதன் மிஷன் 2024 மக்களவைத் தேர்தலிலும் இணைக்க வாய்ப்புள்ளது.
source https://tamil.indianexpress.com/india/behind-karnataka-victory-of-congress-ex-ias-sasikanth-senthil-war-room-head-670787/