16 5 23
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு, பா.ஜ.க-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.
சென்னைக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி, “மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் விவாதித்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசித்தோம், பா.ஜ.க-வை வீழ்த்த விருப்பம் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். பா.ஜ.க-வை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படத் தயாராக உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sitaram-yechury-meets-cm-mk-stalin-and-call-to-uniti-of-opposition-against-bjp-670394/