4 8 23
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்! வெப்பம் தகித்ததால் மக்கள் அவதி!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயிலின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் கோடை கத்திரி வெயிலுக்கு நிகராக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மழை பெய்யாதா என மக்கள் ஏக்கத்துடன் பாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளிலும் வெள்ளியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இன்று மதுரை விமான நிலையம் மற்றும் தூத்துக்குடியில் அதிகபட்சமாக 104°F வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.4°F, சென்னை மீனம்பாக்கத்தில் 100.4°F, கடலூரில் 102.92°F, ஈரோட்டில் 100.4°F, மதுரை விமான நிலையத்தில் 104°F, நாகப்பட்டினத்தில் 102.2°F, பரங்கிப்பேட்டையில் 102.56°F, பாளையங்கோட்டையில் 100.4°F, தஞ்சாவூரில் 100.4°F, திருச்சியில் 101.66°F, தூத்துக்குடியில் 104°F, திருத்தணியில் 100.04°F வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. அதோடு காரைக்காலில் 100.76°F மற்றும் புதுச்சேரியில் 100.76°F வெப்பம் தகித்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
source https://news7tamil.live/14-places-in-tamilnadu-and-puducherry-in-the-sun-people-suffer-due-to-scorching-heat.html