புதன், 30 ஆகஸ்ட், 2023

நெருங்கும் தேர்தல்; சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ200 குறைக்க மத்திய அரசு ஒப்புதல்

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 200 ரூபாய் கூடுதல் மானியத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதைத் தொடர்ந்து, பயனாளிகள் இப்போது மொத்தம் 400 ரூபாய் குறைவாக சிலிண்டரை பெறலாம்.

ரக்‌ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் அளித்த பரிசு என்று கூறிய அமைச்சர் அனுராக் தாக்கூர், “எல்.பி.ஜி.,யின் விலை அனைத்து நுகர்வோருக்கும் ரூ.200 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எல்.பி.ஜி இணைப்புகளையும் அரசாங்கம் இலவசமாக வழங்கும்,” என்றும் கூறினார்.

புதுதில்லியில் தற்போது 14.2 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ.1,103. புதன்கிழமை முதல் இந்த விலை ரூ.903 ஆக இருக்கும். உஜ்வாலா பயனாளிகளுக்கு, சிலிண்டர் மானியம் ரூ.200 தொடரும் என்பதைக் கருத்தில் கொண்டால் விலை ரூ.703 ஆக இருக்கும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிப்ரவரி 4, 2021 அன்று ரூ.25 உயர்த்தப்படுவதற்கு முன்பு சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.694 ஆக இருந்தது.

அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் 2021 முதல் சமையல் எரிவாயு விலையை 13 முறை உயர்த்தியுள்ளன:


source https://tamil.indianexpress.com/india/union-cabinet-approves-cutting-lpg-prices-by-rs-200-per-cylinder-745606/

Related Posts: