புதன், 30 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப்பாம்பு நுழைய முயல்கிறது!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

 

தமிழ்நாடு எனும் வீட்டில் பாஜக எனும் விஷப்பாம்பு நுழைய முயல்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

29 8 23

கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் கழுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மாநாட்டை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு மதுரை அதிமுக மாநாடு எனவும் அவர் சாடினார். மோடியால் வளர்ந்த ஒரே குடும்பம் அதானி குடும்பம் தான் என குற்றம்சாட்டிய அவர், ரயில்வே, விமான சேவை, ஸ்டேடியம் என அனைத்தையும் அதானியிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்றார். அதோடு 9 ஆண்டுகளில் பாஜக சாதித்தது என்ன எனவும் வினவினார் . நான் மோடிக்கும் பயப்படமாட்டேன், ED-க்கும் பயப்பட மேட்டேன் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப்பாம்பு எனும் பாஜக மூலம் நுழைய முயல்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், அதனை விரட்டி அடிக்க வேண்டும் என குறிப்பிட்டார்


source https://news7tamil.live/the-poisonous-snake-bjp-is-trying-to-enter-the-house-of-tamil-nadu-criticism-of-minister-udayanidhi-stalin.html

Related Posts: