புதன், 23 ஆகஸ்ட், 2023

லட்சத்தீவு எம்பி முகமது பைசல் பதவிக்கு புதிய சிக்கல்!

 22 8 23

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்பி முகமது பைசல் குற்றவாளி என்று செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமமான பி.எம்.சையதின் மருமகன் முகமது சாலியை 2009-ம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கொலை செய்ய முயற்சித்ததாக முகமது பைசல் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முகமது பைசல் உள்பட நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கவாராட்டி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மேல்முறையீட்டில் கேரள உயர்நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது. இதனை தொடர்ந்து முகமது பைசலுக்கு எம்பி பதவி மீண்டும் கிடைத்தது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், முகமது பைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், முகமது பைசல் எம்பியாக தொடரலாம் என்றும், ஆறு மாதத்துக்குள் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


source https://news7tamil.live/case-related-to-lakshadweep-mp-mohammed-faisal-supreme-court-action-order.html