புதன், 30 ஆகஸ்ட், 2023

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரைபடம் வெளியிட்ட சீனா! தொடரும் அடாவடித்தனத்துக்கு இந்தியா கண்டனம்!

 29 8 23

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கில் பல சதுர கிலோ மீட்டர் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதிய வரைபடம் ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதில் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்றும், தைவானையும் தம்முடைய நிலப் பகுதி என்றும் வரைபடத்தில் சீனா குறிப்பிட்டுள்ளது. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் தன்னுடைய நிலப்பகுதி என சீனா இந்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியாக சீனா அவ்வப்போது இவ்வாறு இந்திய நிலப்பகுதி உள்பட தனது அண்டை நாடுகளின் நிலப்பரப்புகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் அவ்வப்போது எல்லையில் பற்றமும் ராணுவ வீரர்களின் கைகலப்பும் நடந்தவண்ணம் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போதும் சீனா இந்திய நிலப்பரப்பில் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டி தனது விஷம குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.


credit https://news7tamil.live/arunachal-pradesh-has-been-claimed-by-china-condemn-india-for-continued-insolence.html