சனி, 26 ஆகஸ்ட், 2023

‘சீனாவின் நில அபகரிப்பு குறித்து பிரதமர் கூறியது பொய்’ -ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

 

லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பொய் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

லாடக் சென்றுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நடந்த பேரணியில் அவர் கொண்டார்

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: 

‘சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமை நடைப் பயணம்’ என்ற பெயரில் மக்களைச் சந்தித்தோம். சிலர் இங்கு தங்கள் மனதின் உள்ள குரலைப் பேசி வரும் நிலையில் நான் மக்களின் குரலைக் கேட்கிறேன்.

இந்த பயணத்தின் நோக்கம் நாட்டில் பாஜக-ஆர்எஸ்எஸ் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நிற்பதே. மக்களிடம் அன்பைக் காட்டுவதே ஆகும்.
அந்த பயணத்தின்போது என்னால் லடாக் வர முடியவில்லை. அப்போது இங்கு குளிர்காலம், பனிப்பொழிவு இருந்தது. இன்று லடாக்கின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்துள்ளேன். மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். நம் நாட்டின் நிலத்தை சீனா கைப்பற்றியது லடாக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி உண்மையைச் சொல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவர் லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி அதானி குழுமத்திற்கு கொடுக்கிறார். அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார். லடாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சனைகள் உள்ளன. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உங்கள் முக்கியப் பிரச்னைகளை அவையில் பேசுவேன்’ என்று கூறியுள்ளார்.


source https://news7tamil.live/prime-minister-modi-lied-about-chinas-land-grab-rahul-gandhi-accuses.html