வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

2 முதல் 3 கிராம்பை வாயில் போட்டு மென்றால் போதும்: இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கு

 

clove
clove

மசாலா உணவு பொருட்களில் கிராம்பு முக்கிய இடம் பெறுகிறது. பல் சிதைவு நோய், பல் வலி , செரிமான பிரச்சனைகள், வாய் துர்நாற்றம்   போன்றவற்றுக்கு பயன்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்து கலவை மற்றும் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

இதில் பிளவனாய்ட்ஸ் , பினாலிக் காம்பவுண்ட்ஸ், வைட்டமின் சி உள்ளது. இவை செல்களை பாதிக்கும் தன்மையை குறைக்கிறது. இதன் மூலம் தீவிரமான நோய்கள் ஏற்படுவது குறைகிறது.

ADVERTISEMENT

கிராம்பில் யுகினால், வீக்கத்திற்கு எதிரான தன்மையை கொண்டது.  எனவே கிராம்பை நாம் அடிக்கடி பயன்படுத்தும்போது, வீக்கம் தொடர்பான ஆர்த்ரைடிஸ் குணமாக உதவுகிறது.

பல் வலி ஏற்பட்டால் வீட்டில் செய்யப்படும் வைத்தியத்தில், கிராம்பு இடம்பெறும். கிராம்பில் உள்ள யுகினால் இயற்கையாக வலி நிவாரணியாக செயல்படுகிறது. இது கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கிராம்பை நாம் வெறும் வாயில் போட்டு மென்றால், வாயில் உள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை  எதிர்த்து போராட உதவுகிறது. பல்லில் ஏற்படும் கேவிட்டி சிக்கலை குறைக்க உதவுகிறது.

கிராம்பில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்பு, குடலில் உள்ள தேவையற்ற பேக்டீரியாக்களை குறைக்கும். இந்நிலையில் இதில் உள்ள கார்மொனேடிவ் பண்பு, வாயுத் தொல்லை, வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவும்.

இதில் உள்ள சில பண்புகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் கீராம்பை தொடர்ந்து சாப்பிட்டால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கிராம்பில் உள்ள வைட்டமின் சி கலந்த உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். கிராம்புகளில் காணப்படும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் கே எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது. இதனால் வயதானவர்கள் உணவில் கிராம்பை சேர்த்துகொள்ள வேண்டும்.

நமது சுவாச ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது. இருமல், சளி போன்றவற்றை கிராம்பு குணமாகக் உதவுகிறது. சளியின் போது அடைபட்ட காற்று பாதைகளை திறக்க உதவுகிறது. இதனால் சிரமமின்றி சுவாசிக்க முடியும்.  

source https://tamil.indianexpress.com/food/health-benefits-for-consuming-cloves-daily-743422/