நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், தாமரை பாரதி உள்ளிட்டோர் பேசிய பின்னர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது திமுக உடன் தொடர்பு, மகேஷ் உடன் நட்பு என கடந்த கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். தொடர்ந்து, அண்ணாமலை பாத யாத்திரை செல்லவில்லை; பாதி யாத்திரை செல்கிறார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி-காஷ்மீர் வரை சென்றதுதான் நடைபயணம்” என்றார். முன்னதாக நீட் தேர்வு பற்றிய நாஞ்சில் சம்பத், “இந்தத் தேர்வு மருத்துவ மாணவர்களின் கனவை பாலைவனம் ஆக்கியுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, “மூன்று முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவர் ஜவஹர்லால் நேரு மட்டும்தான். அது இன்னொருவருக்கு கிடைக்காது.
2024 மக்களவை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்” என்றார். இதையடுத்து, “மு.க. ஸ்டாலின் பின் அணி ஆவோம், ஆதரவாவோம், வேண்டும் என்றால் ஆயுதம் ஆவோம்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-centenary-general-meeting-at-nagercoil-742624/