வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெறும் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ராமநாதரபும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூரில் வைத்து ஒரு பெண்ணை சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன் நடைபெற்ற திருமணம் செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், ‘தமிழக அரசின் திருத்தப்பட்ட ஹிந்து திருமண சட்டத்தின்படி, வயதுக்கு வந்த ஜோடிகளுக்கு, அவர்களது சம்மதத்தின் அடிப்படையில், சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வைக்கலாம்’ என அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Credit https://news7tamil.live/lawyers-can-conduct-self-respect-marriages-supreme-court-action-order.html