உண்மை தான் என்றைக்குமே வெல்லும், என் பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து இன்று உத்தரவிட்டது.
இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
உண்மை தான் என்றைக்குமே வெல்லும், உண்மை இன்று வெல்ல முடியவில்லை என்றால் நாளை வெல்லும், நாளை முடியவில்லை என்றால் நாளை மறுநாள் வெல்லும், ஆனால் உண்மை தான் என்றைக்குமே வெல்லும். என் பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன். தனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இதனை அடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். நீதி உள்ளது, நீதி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். மிக மகிழ்ச்சியான தினம், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவின் இளைஞர்கள், பெண்கள் என போராடும் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சந்தித்த குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆசீர்வாதத்தால் கிடைத்த தீர்ப்பு. சூரத் நீதிமன்றம் தொலைவில் உள்ளது. ஆனால்
உச்சநீதிமன்றமும், நாடாளுமன்றம் ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. தகுதிநீக்க உத்தரவை இன்று இரவுக்கு திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
4 8 23
source https://news7tamil.live/i-am-clear-on-my-path-to-win-the-truth-rahul-gandhi-interviewed-while-his-2-year-prison-sentence-was-suspended.html