மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்படடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை ஆஜர்படுத்துதல், தடுப்புக்காவல், நீதிமன்றக் காவல் மற்றும் நீட்டிப்பு தொடர்பான நீதித்துறை நடைமுறைகளை கவுஹாத்தியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இணைய வழியில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சிபிஐ வழக்குகள் தொடர்பான பிற நபர்கள் இணைய வழியில் ஆஜராக விரும்பவில்லை என்றால், நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் அமர்வு அனுமதித்துள்ளது.
source https://news7tamil.live/manipur-rape-cases-change-to-assam.html