ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

இங்கிலாந்து நாட்டின் மருத்துவமனைகளின் தமிழ்நாட்டை சேர்ந்த 500 செவிலியர்கள் பணிபுரிய ஏற்பாடு!” – அமைச்சர் செஞ்சிமஸ்தான் பேட்டி

 

இங்கிலாந்து நாட்டின் மருத்துவமனைகளின் 500 செவிலியர்கள் வேலைக்காக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் செஞ்சிமஸ்தான் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முலமாக சவூதி அரேபியாவில் செவிலியர்களாக பணியாற்ற 6 பேரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முலமாக குவைத், சவூதி அரேபியா, குவைத், ஒமன், இங்கிலாந்து, கண்டா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முதலமைச்சர் பல்வேறு
நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனம் முலம்
பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரப்படுகிறது.இங்கிலாந்து நாட்டிற்கு 500 செவிலியர்கள் வேலை வாய்ப்பிற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்  செஞ்சிமஸ்தான் கூறினார்.


source https://news7tamil.live/500-nurses-from-tamil-nadu-to-work-in-uk-hospitals-interview-with-minister-senchimastan.html