திங்கள், 28 ஆகஸ்ட், 2023

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பயங்கர தீ – பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

 

திருப்பூர் பல வஞ்சிபாளையத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட
பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன்
பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து
வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை தொழிலாளர்கள் பணி முடிந்து வெளியேறிய சிறிது நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது. இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பனியன் நிறுவனம் 3000 அடிக்கும் மேற்பட்ட சதுர அடியிலுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள் ஏற்றுமதிக்கு தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும்
எரிந்து சேதம்டைந்தது.

Image
தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.


source https://news7tamil.live/terrible-fire-at-tirupur-knitwear-manufacturing-company-goods-worth-crores-damaged.html