ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கூகுள் கீப்-ல் புது வசதி அறிமுகம்: ஆண்ட்ராய்டு பயனர்கள் செக் பண்ணுங்க!

 26 8 23

Google Keep Notes
Google Keep

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கீப் ஆப்-ல் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் (Text formatting) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். கூகுள் கீப் பிரபலமான Note-taking ஆப் ஆகும். எனினும் இதில் புதிதாக டெக்ஸ்ட் வடிவங்கள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. பயனர்கள் பலரும் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஆப்ஷன் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது bold, italicize, underline, and strikethrough எனப் பல்வேறு டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் ஆப்ஷன்களை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் டெக்ஸ்ட்டை Organised- ஆக வைத்துக் கொள்ள உதவும்.

இந்த அம்சம் கூகுள் கீப்-ல் டெக்ஸ்ட் டைப் செய்யும் போது மேலே ஆப்ஷன்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஆப்-ஐ அப்டேட் செய்து இந்த புது வசதியைப் பெறலாம்.




source https://tamil.indianexpress.com/technology/google-keep-finally-gets-text-formatting-options-on-android-744285/