சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது, ஏவுகணைத் தொகுதியிலிருந்து பிரிந்த பிறகு, சந்திரயான்-3 விண்கலம் ஒவ்வொரு முறையும் பூமியின் உயரமான சுற்றுப்பாதையில் ஏறும் பல கட்டுப்பாடான இயக்கங்களை மேற்கொண்டது.
இறுதியாக ஆகஸ்ட் 5 அன்று “டிரான்ஸ்லூனர்” சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. பின்னர், ஆகஸ்ட் 6, ஞாயிற்றுக்கிழமை, விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்தது.
இது முதலில் சந்திரனில் இருந்து குறைந்தபட்சமாக 164 கிலோமீட்டர் தொலைவிலும், சந்திரனில் இருந்து அதிகபட்சமாக 18,074 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையை அடைந்தது.
பின்னர் விண்கலம் ஒரு கட்டுபாடான இயக்கத்தை முடித்து, 170 க்கு 4313 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு சென்றது. மிஷனின் அடுத்த சுற்றுப்பாதை இயக்கம் இன்று பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு இயக்கம் அதன் இறுதி 100 கிலோமீட்டருக்கு 100 கிலோமீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது.
இந்த நிலையில் சந்திரயான் விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இந்தப் புகைப்படம் ஆக.9ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும். இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும், இன்று சந்திரயான்3 தலைகீழாக திரும்புகிறது. இது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
சந்திரயான் ஆகஸ்ட் 23 அன்று நிலவு மேற்பரப்பில் தரையிறங்கும். . அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை இதைச் சாதித்துள்ளன. இந்தியாவின் சந்திரயான் 2 தோல்வியில் முடிந்தது நினைவு கூரத்தக்கது
source https://tamil.indianexpress.com/science/chandrayaan-3-photographed-the-moon-739667/