மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட பணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு முழுதும் 43 ஆயிரத்து 244 மின் கம்பங்களை மாற்றுவது மற்றும் 20 ஆயிரத்து 570 இடங்களில் மின் கம்பியை சரிசெய்வது என்று மொத்தம், 3 லட்சத்து 89 லட்சம் பணிகள் நடக்க வேண்டும்.
அவற்றை முறையான திட்டமிடலுடன் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து அதிக நேரம் மின் தடை ஏற்படாமல் செய்ய வேண்டும்.
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம், அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும், ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடத்தப் பட உள்ளது.
அப்போது, கட்டணம் செலுத்திய அன்றே உடனடியாக பெயர் மாற்றமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
சிறப்பு முகாம்கள்
இந்த நிலையில், பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்களை தவிர்த்து நடைபெற உள்ளன.
இது, அனைத்து அலுவலுக வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்டு உள்ள கட்டணமான ரூ. 726 செலுத்தி பெயர் மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
source https://tamil.indianexpress.com/technology/special-camps-are-going-to-be-held-in-tamilnadu-for-changing-the-name-of-electricity-connection-739642/