ஹரியானா மாநிலம் நூஹ் வன்முறைக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்
ஹரியானா மாநிலம் குருகிராமை அடுத்த நூஹ் என்ற பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அமைப்பினர் பேரணியாக சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதி அருகே வந்த போது வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில ஊர்க்காவல்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். அப்குதியில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து நூஹ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததால், 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் பாதுகார்பபு குறைபாடு காரணமாகவே வன்முறை ஏற்பட்டதாக ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.
நூஹ் காவல் கண்காணிப்பாளர் ஜூலை 22 முதல் விடுப்பில் இருந்ததாகவும், அவருக்கு பதிலாக பணியில் இருந்த எஸ்பியால் நிலைமையை சரியாக மதிப்பிட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பேரணிக்கு அனுமதி அளித்த அதிகாரிகளாலும் அதை சரியாக மதிப்பிட முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பேரணி செல்லும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என்றும், விழா அமைப்பாளர்களால் கூட்டத்தை மதிப்பிட முடியவில்லை என்றும் துஷ்யந்த் சவுதாலா கூறினார்.
source https://news7tamil.live/haryana-deputy-cm-dushyant-chautala-admits-lapses-led-to-nuh-violence.html