திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “”மாணவர்களே, மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் நமக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
மனிதநேயம் என்றால் என்ன என்ற அடிப்படை விஷயத்தை பல்வேறு விதங்களில் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதெல்லாம் புத்திக்கே ஏறாமல் இருந்த மனிதர்களுக்கு எல்லாம் கொரோனா என்ற கொடூரமான நோய் நம்மை தாக்கும்போது தான் புத்திக்கு ஏறியது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பள்ளிக் கல்விக்காக முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களால் இவ்வளவு பேர் பயன் பெறுகிறார்கள் என பெருமையாக பேசுகிறோம்.
நம்மை பார்த்து மற்ற மாநிலங்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு பள்ளிக் கல்வியில் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
இப்படியான சூழலில் 2 நாள்களுக்கு முன்பு ஒரு நிகழ்வு நடக்கிறது. அது எந்த மாவட்டம், எந்த பள்ளி என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.
மாணவர்களுக்கு ஓர் வேண்டுகோள். முதல்வர் சொல்வது போல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வீட்டு பிள்ளையாக சொல்கிறேன்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது. அந்தக் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-anbil-mahesh-has-said-that-he-will-meet-the-educational-expenses-of-the-school-student-who-was-attacked-in-nanguneri-737917/