சனி, 5 ஆகஸ்ட், 2023

ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன?

5 8 23

rahul gandhi news, supreme court, defamation case, ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன, ராகுல் காந்தி வழக்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, stay, MP status, memebr of parliament, explained, express explained, current affairs, india news
ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் – அது இல்லை என்பது போல ஆகும். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தண்டனையிலிருந்து விடுவிக்கிறது – மேலும் தண்டனைக்கு தடை விதிப்பதுடன் தகுதி நீக்கம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நிறுத்தி வைத்தது.

நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராகுலுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏன் வழங்கப்பட வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்ற நீதிபதி நியாயப்படுத்தவில்லை என்று கூறியது.

ராகுல் காந்தி மீதான உச்ச நீதிமன்ற உத்தரவின் தாக்கம் என்ன?

உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் அடிப்படையில் ராகுலின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் – அது இல்லை என்பது போல ஆகும். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தண்டனையிலிருந்து விடுவிக்கிறது – மேலும் தண்டனைக்கு தடை விதிப்பதுடன் அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. அந்த மேல்முறையீட்டு செயல்முறை முடியும் வரை ராகுலின் தகுதி நீக்கம் நிறுத்தி வைக்கப்படும்.

2018 ஆம் ஆண்டு ‘லோக் பிரஹாரி வி யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற தீர்ப்பில், தகுதி நீக்கம் மேல்முறையீட்டில் நீதிமன்றத்தால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து செயல்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்காது என்று அர்த்தமா?

அது சாத்தியமில்லை. மக்களவை சபாநாயகரால் தகுதி நீக்கம் இன்னும் முறைப்படி ரத்து செய்யப்படாத நிலையில், தடை விதித்ததன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை நீக்கியுள்ளது.

இந்த தண்டனையானது ராகுலின் பொது வாழ்க்கையை மட்டுமின்றி, அவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமைகளையும் பாதிக்கிறது என்றும், இது பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

இந்த முடிவின் விளைவாக ராகுல் நாடாளுமன்றத்திற்கு திரும்ப முடியுமா?

லோக்சபா செயலகம் முறைப்படி தகுதி நீக்கத்தை ரத்து செய்த பிறகு இது சாதாரண போக்கில் நடக்க வேண்டும். எம்.பி. என்ற முறையில் அவரது சலுகைகளும் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

ஏப்ரல் 13, 2019-ல் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பேரணியில் இந்தியில் பேசினார்: “நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் ஏன்? ‘மோடி’ என்ற பெயர் வருகிறது?” என்று கூறினார்.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நகைக்கடை வியாபாரி நிரவ் மோடி மற்றும் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி லலித் மோடி ஆகியோரைக் குறிப்பிடும் விதமாகப் பேசினார். அவர்கள் இருவரும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு அடுத்த நாள், குஜராத் பா.ஜ.க தலைவரும், குஜராத் மாநில முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு தனிப்பட்ட முறையில் புகார் அளித்தார்.

மார்ச் 23, 2023-ல் மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா, ஐ.பி.சி பிரிவு 500-ன் கீழ் கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தார். மேலும், அந்த பிரிவின் கீழ் அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 8(3) ஐத் தூண்டியது. அந்த பிரிவு கூறுகிறது: “எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் அந்த தேதியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தண்டனை மற்றும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” என்று கூறுகிறது.

இதன் விளைவாக, மார்ச் 24-ம் தேதி மக்களவைச் செயலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ராகுல் காந்தி தண்டை விதிக்கப்பட்ட மார்ச் 23-ம் தேதி முதல் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு ராகுல் காந்தி என்ன செய்தார்?

இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, ராகுல் காந்தி அடுத்து உயர் நீதிமன்றமான சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். ஒன்று இரண்டு வருட சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும், மற்றொன்று தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் மனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 20-ம் தேதி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி. மொகேரா இரண்டு மனுக்களையும் நிராகரித்தார்.

இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஜூலை 7-ம் தேதி நீதிபதி ஹேமந்த் பிரச்சக் மேல்முறையீட்டை நிராகரித்தார். மேலும், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு நியாயமானது மற்றும் சட்டப்பூர்வமானது என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/explained/rahul-gandhi-defamation-case-supreme-court-stay-he-could-return-as-mp-734981/