புதன், 2 ஆகஸ்ட், 2023

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் -

 துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

மனித மிருகங்களாக மாறி வரும் சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் கையில் அதிகாரமும், துப்பாக்கியும் இருப்பதால் குருவி சுடுவது போன்று மூன்று முஸ்லிம்களையும், ஒரு காவல்துறை அதிகாரியையும் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தில் அதிகாலை 5 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
ஆர்.பி.எப் பணியாளர் சேத்தன் சிங் என்பவன் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் சப் இன்ஸ்பெக்டர் அவர்களையும், 3 முஸ்லிம்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனா மற்றும் பயணிகளான அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் பன்புர்வாலா , அக்தர் அப்பாஸ் அலி, மற்றும் சதர் முகமது உசேன் ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.
துப்பாக்கி பயன்படுத்திய பயங்கரவாதி மனநோய் பாதிக்கப்பட்டவன் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டாலும் அந்த சம்பவம் நடந்த வீடியோ காட்சிகள் இது திட்டமிட்டு முஸ்லிம்களை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாகவே கருத வேண்டி உள்ளது.
இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அந்த நேரத்தில் பிரதமர் மோடி குறித்தும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் பேசியுள்ளான்.
தொடர்ச்சியாக முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்தியாவில் வாடிக்கையாகிவிட்ட இந்த சூழ்நிலையில் இரயில் பயணத்தில் காவல்துறையினரே இப்படி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது மக்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.