திங்கள், 14 ஆகஸ்ட், 2023

காந்தி படுகொலை, குஜராத் கலவரம்; NCERT வரலாறு பாடப் புத்தகங்களில் நீக்கிய பகுதிகளை மீண்டும் சேர்த்த கேரளா

 13 8 23

books kerala ncert
மகாத்மா காந்தி படுகொலை மற்றும் குஜராத் கலவரம் தொடர்பான சில பகுதிகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கிய NCERT; மீண்டும் சேர்த்த கேரளா அரசு

Shaju Philip

கேரளக் கல்வித் துறையானது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான துணைப் பாடப்புத்தகங்களில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் ‘பாடத்திட்டத்தை திருத்துதல்’ செயல்முறையின் ஒரு பகுதியாக முன்பு நீக்கிய பகுதிகளை சேர்த்துள்ளது.

துணை பாடப்புத்தகங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று கேரள கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த பாடப்புத்தகங்களில் மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் குஜராத் கலவரம் உள்பட NCERT வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட மற்ற பகுதிகள் இடம் பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக, கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பாடப்புத்தகங்களில் இருந்து NCERT நீக்கிய பகுதிகளை கற்பிக்க முடிவு செய்தது. இதனையடுத்து துணை பாடப்புத்தகங்களை வெளியிடுவது SCERT பாடத்திட்ட குழுவால் எடுக்கப்பட்டது.

பாடத்திட்டத்தின் திருத்துதல் செயல்முறையின் ஒரு பகுதியாக பாடப்புத்தகங்களில் இருந்து சில பகுதிகளை நீக்கும் NCERT முடிவை கேரளாவில் உள்ள CPI(M) அரசாங்கம் கடுமையாக விமர்சித்தது.

NCERT 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை திருத்தல் செய்திருந்தாலும், கேரளா 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே NCERT பாடப்புத்தகங்களை சார்ந்துள்ளது. மற்ற வகுப்புகளுக்கான NCERT மாற்றங்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கேரள அரசுப் பள்ளிகளில் மாணவர்களைப் பாதிக்காது.

source https://tamil.indianexpress.com/india/kerala-distribute-supplementary-textbooks-classes-11-12-deleted-parts-ncert-books-738341/