இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், காஸாவில் இதுவரை இந்த போரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 42,000-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
source https://news7tamil.live/israel-hamas-war-death-toll-exceeds-17000-in-gaza.html