தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுவதாக கணித்துள்ளது.
5 மாநில தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மத்தியபிரதேசத்தில் தேர்தல் ஆரம்பித்தது முதல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதே நிலையே தற்போதும் தொடர்கிறது. முதல்வர் சிவராஜ் சிங் சௌகானை முன்னிறுத்தாமல் பா.ஜ.க தேர்தலைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கமல்நாத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டது. இந்தியா கூட்டணி தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டாலும் காங்கிரஸ், மத்திய பிரதேசத்தில் கடும் சவால் விடுவதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க 100-123 இடங்களையும், காங்கிரஸ் 102-125 இடங்களையும் கைப்பற்றும் என்று ஜான் கி பாத் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 106-116 இடங்களும், காங்கிரஸுக்கு 111-121 இடங்களும் கிடைக்கும் என்று TV9 Bharatvarsh - Polstrat கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 118-130 இடங்களும், காங்கிரஸுக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 95-115 இடங்களும், காங்கிரஸுக்கு 105-120 இடங்களும் கிடைக்கும் என்று டைனிக்பாஸ்கர் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 151 இடங்களும், காங்கிரஸுக்கு 74 இடங்களும் கிடைக்கும் என்று நியூஸ்24 – டுடேஸ் சாணக்யா கணித்துள்ளது.
அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிற கட்சிகள் அல்லது சுயேட்சைகள் 5 இடங்கள் வரை கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் தனித்து களம் காணும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று கணித்துள்ளன.
இதேபோல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் – பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பா.ஜ.க 100-122 இடங்களிலும், காங்கிரஸ் 62-85 இடங்களிலும் வெற்றி பெறும் என்று ஜான் கீ பாத் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 94-114 இடங்களும், காங்கிரஸுக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று ரிபப்ளிக் ஏ.பி.பி நியூஸ் – சிவோட்டர் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 100-110 இடங்களும், காங்கிரஸுக்கு 90-100 இடங்களும் கிடைக்கும் என்று TV9 Bharatvarsh - Polstrat கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 80-100 இடங்களும், காங்கிரஸுக்கு 86-106 இடங்களும் கிடைக்கும் என்று ரிபப்ளிக் இந்தியாடுடே – ஆக்ஸிஸ் மைஇந்தியா கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 115-130 இடங்களும், காங்கிரஸுக்கு 65-75 இடங்களும் கிடைக்கும் என்று ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் கணித்துள்ளது.
பா.ஜ.க.,வுக்கு 108-128 இடங்களும் காங்கிரஸுக்கு 56-72 இடங்களும் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ்-ETG கணித்துள்ளது.
அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிற கட்சிகள் அல்லது சுயேட்சைகள் 8-16 இடங்கள் வரை கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் தனித்து களம் காணும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று பெரும்பாலான நிறுவனங்கள் கணித்துள்ளன.
source https://tamil.indianexpress.com/india/exit-polls-results-updates-rajasthan-madhya-pradesh-assembly-elections-1714915