வெள்ளி, 1 டிசம்பர், 2023

Exit Poll Results: 3 மாநிலங்களில் கடும் போட்டி; 2 மாநிலங்களில் காங்கிரஸ் ஆதிக்கம்? கருத்துக் கணிப்பு முடிவுகள்

 30 11 2023 

election 5 states exit

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இங்கே

ராஜஸ்தான்மத்தியப் பிரதேசம்தெலுங்கானாசத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அனைத்துக் கட்சிகளின் தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகுநவம்பர் 7 ஆம் தேதி தொடங்கிஐந்து மாநிலங்களிலும் கடந்த மாதம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறது. கடந்த 2018 தேர்தலில்காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற முடிந்ததுஆனால் 2020 இல் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான ஒரு கிளர்ச்சிபா.ஜ.க.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது.

பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்திருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் முக்கோணப் போட்டி நிலவுகிறது.

மிசோரமில்எப்போதும் போல் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் (எம்.என்.எஃப்)- காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது, கூடுதலாக இந்த ஜோராம்ஸ் மக்கள் இயக்கம் (ZPM) புதிய சவால் அளிக்கிறது.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் முக்கியமானவைஏனெனில் இரு கட்சிகளும் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வேகத்தை உருவாக்க வெற்றியை தீவிரமாக நாடுகின்றன. இந்த ஐந்து மாநிலங்களும் சேர்ந்து 83 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் புகழ்மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் இந்த மாநிலங்களில் கட்சியின் அமைப்பு பலத்தை பா.ஜ.க நம்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவுவதாக கணித்துள்ளது. ஜான் கி பாத் பா.ஜ.க 100-123 இடங்களையும்காங்கிரஸ் 102-125 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. TVBharatvarsh-Polstrat பா.ஜ.க.,வுக்கு 106-116 இடங்களும்காங்கிரஸுக்கு 111-121 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ் பா.ஜ.க.,வுக்கு 118-130 இடங்களும்காங்கிரஸுக்கு 97-107 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

சத்தீஸ்கரில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கரில் பா.ஜ.க.,வுக்கு 36-46 இடங்களும்காங்கிரஸுக்கு 40-50 இடங்களும் கிடைக்கும் என்று இந்தியா டுடே கணித்துள்ளது. ஏ.பி.பி நியூஸ் சி-வோட்டர் பா.ஜ.க.,வுக்கு 36-48 இடங்களையும்காங்கிரஸுக்கு 41-53 இடங்களையும் வழங்கியுள்ளது. பா.ஜ.க.,வுக்கு 30-40 இடங்களும்காங்கிரஸுக்கு 46-56 இடங்களும் கிடைக்கும் என இந்தியா டிவி கணித்துள்ளது. ஜன் கி பாத் பா.ஜ.க.,வுக்கு 34-45 இடங்களும்காங்கிரஸுக்கு 42-53 இடங்களும் வழங்கியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசை முந்தும் பா.ஜ.க

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பா.ஜ.க 100-122 இடங்களிலும்காங்கிரஸ் 62-85 இடங்களிலும் வெற்றி பெறும் என்று ஜான் கீ பாத் கணித்துள்ளது. TVBharatvarsh-Polstrat பா.ஜ.க.,வுக்கு 100-110 இடங்களும்காங்கிரஸுக்கு 90-100 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. டைம்ஸ் நவ்-ETG பா.ஜ.க.,வுக்கு 108-128 இடங்களும் காங்கிரஸுக்கு 56-72 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி

தெலுங்கானாவில்தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆளும் பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நெருக்கமான போட்டியை கணித்துள்ளனஇந்தியா டிவி-சி.என்.எக்ஸ் பி.ஆர்.எஸ்.,க்கு 31-47 இடங்களும்காங்கிரஸுக்கு 63-79 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளதுபா.ஜ.க 2-4 இடங்களையும், AIMIM 5-7 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத் BRS க்கு 40-55 இடங்களும் காங்கிரஸுக்கு 48-64 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளதுபா.ஜ.க 7-13 இடங்களிலும், AIMIM 4-7 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி பி.ஆர்.எஸ்-க்கு 46-56 இடங்களும்காங்கிரஸுக்கு 58-68 இடங்களும்பா.ஜ.க.,வுக்கு 4-9 இடங்களும், AIMIM-க்கு 5-7 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. TVBharatvarsh Polstart BRS க்கு 48-58 இடங்களும்காங்கிரஸுக்கு 49-59 இடங்களும், BJP க்கு 5-10 இடங்களும், AIMIM 6-8 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

மிசோரமில் ZPM மற்றும் MNF இடையே கடும் போட்டிபின்தங்கிய பா.ஜ.க

மிசோரமில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க பின்தங்கிய நிலையில், சோரம் மக்கள் இயக்கம் (ZPM) மிசோ தேசிய முன்னணியுடன் (MNF) நெருங்கிய போட்டியில் ஈடுபட்டுள்ளதாக கருத்துக் கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியா டிவி-சி.என்.எக்ஸ் MNF 14-18, ZPM 12-16காங்கிரஸ் 8-10 மற்றும் பா.ஜ.க 0-2 என கணித்துள்ளது. ஏ.பி.பி நியூஸ்-சி வோட்டர் MNF 15-21, ZPM 12-18 மற்றும் காங்கிரஸ் 2- 8 என கணித்துள்ளது. MNF 10-14 இடங்களும், ZPM 15-25 இடங்களும்காங்கிரஸ் 5-9 இடங்களும், பா.ஜ.க 0-2 இடங்களும் பெறும் என்று ஜன் கி பாத் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/exit-poll-live-results-rajasthan-madhya-pradesh-telangana-chhattisgarh-mizoram-assembly-elections-1714641