வெள்ளி, 15 டிசம்பர், 2023

ஜனநாயக கோவிலில் பாதுகாப்பு குறைபாடு: பதில் தேடும் எம்.பி.க்களை தண்டிப்பதா? மு.க. ஸ்டாலின் கேள்வி

 CMStalin.jpg

ஜனநாயக கோவிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு பதில் தேடும் எம்.பி.க்களை தண்டிப்பதா என மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பி உள்ளார்.

mk-stalin | mp-kanimozhi | lok-sabha திமுக எம்.பி. கனிமொழி உள்பட 15 மக்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மு.க. ஸடாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “திமுக எம்.பி. கனிமொழி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் ஜனநாயக விரோதமானது.

இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வை குழிதோண்டி புதைக்கிறது. மத்திய அரசின் சகிப்புதன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கதக்கது” எனக் கூறியுள்ளார்.

மேலும், “எம்.பி.க்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதுதான் நாடாளுமன்றத்தின் புதிய விதிகளா? எனக் கேள்வியெழுப்பிய அவர், ஜனநாயக கோவிலில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்; நாடாளுமன்றம் என்பது விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளை வாயடைக்க வைப்பதாக இருக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மக்களவையில் பார்வையாளர்கள் கேலரியில் இருந்த இருவர் வண்ண புகை குப்பிகளுடன் உறுப்பினர்கள் இருக்கைக்கு வந்தனர்.

இதனால் மக்களவையில் மஞ்சள் நிற வண்ண புகை பரவியது. இந்தச் சம்பவம் நடந்தபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் அவையில் இருந்தனர்.

இந்த நிலையில், இந்தப் பாதுகாப்பு மீறலுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் குரல் கொடுத்தனர்.

அப்போது இது தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாக கனிமொழி உள்பட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalins-question-is-whether-to-punish-the-mps-who-seek-answers-to-the-lack-of-security-in-the-democratic-temple-2024071

Related Posts:

  • வள்ளல்! வள்ளல்!கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,இந்தியாவுக்கு மிகவும்அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எ… Read More
  • ”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்” இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நட… Read More
  • கண்டங்கத்திரி! பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி! கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் … Read More
  • முக பெரிய - அதப், நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர். (மரணத்தில் சந்தேகம் உள்ளது, 1) &nb… Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 63.9865000000 0.015628296… Read More