திங்கள், 6 மே, 2024

தமிழ்நாடு உள்பட பல கடலோரப் பகுதிகளுக்கு அதீத அலைக்கான எச்சரிக்கை: 'கல்லக்கடல்' என்றால் என்ன?

 4 5 24

Swell.jpg

இந்திய கடல்சார் தகவல் மையம் (INCOIS0 பல்வேறு மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் சனிக்கிழமை (மே 4) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) அதீத அலைக்கான 'கல்லக்கடல்' என்று அழைக்கப்படும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, குஜராத் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை கடல் அலைகள், உயரமாக எழக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

INCOIS மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரை/அருகில் உள்ள பகுதிகளில் செயல்பாடு/பொழுதுபோக்கு நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்துமாறு வலியுறுத்தியது.  மார்ச் மாதத்தில், கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது - ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் கேரளாவில் 'கல்லக்கடல்' என்று அழைக்கப்படுகிறது.

Swell waves என்றால் என்ன? 

இந்த அலைகள் கடல் சீற்றத்தால் உருவாகின்றன. கடல் அலைகள் உள்ளூர் காற்றின் காரணமாக அல்ல, மாறாக சூறாவளி போன்ற தொலைதூர புயல்கள் அல்லது நீண்ட கால கடுமையான சூறாவளி காற்றின் காரணமாக ஏற்படுகிறது.

 

இத்தகைய புயல்களின் போது, ​​காற்றில் இருந்து தண்ணீருக்கு மிகப்பெரிய ஆற்றல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இது மிக உயர்ந்த அலைகளை உருவாக்க வழிவகுக்கிறது. இத்தகைய அலைகள் புயல் மையத்திலிருந்து கரையைத் தாக்கும் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். 

வழக்கமாக, கேரளா போன்ற மாநிலங்கள் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் பலத்த காற்றின் விளைவாக அலைகளை எதிர்கொள்கின்றன, அங்கு ஒரு கடல் அலை உருவாகிறது, மேலும் அலைகள் வடக்கே பயணித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கடற்கரையை அடைகின்றன.

இந்தியக் கடற்கரையிலிருந்து 10,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து குறைந்த வளிமண்டல அழுத்தம் அமைப்பு நகர்ந்த பிறகு மார்ச் மாதம் இந்த அலைகள் உருவாக்கப்பட்டன. அழுத்த அமைப்பின் வருகை பலத்த காற்றை ஏற்படுத்தியது, இது 11 மீட்டர் உயரம் வரை அலைகள் உருவாக வழிவகுத்தது. இந்த அலைகள் கேரள கடற்கரை மற்றும் லட்சத்தீவுகளை தாக்கியது. 


Swell waves வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிய 2020-ம் ஆண்டில் INCOIS ஸ்வெல் சர்ஜ் முன்னறிவிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை நிறுவியதன் மூலம் 7 நாட்களுக்கு முன்பே Swell waves வருவதற்கான  முன்னறிவிப்பை பெற முடியும். 

Swell waves- சுனாமிக்கும் என்ன வித்தியாசம்?

Swell waves போல் அல்லாமல் சுனாமி அலைகள் பெரிய அளவில் தொடர்ச்சியாக வரும். நீருக்கடியில் ஏற்படும் இடையூறுகளால் உருவாகி அலைகள் எழும். இது பொதுவாக பூகம்பங்கள் ஏற்பட்டு நிகழும். Swell waves விட சுனாமி அலைகள் 10 மடங்கு வேகமானது. Swell waves மற்றும் சுனாமிகள் இரண்டும் கடற்கரைக்கு அருகில் மெதுவாக இருந்தாலும், பின்பு அது மணிக்கு 30-50 கிமீ வேகத்தில் தரையைத் தாக்கும். 

source https://tamil.indianexpress.com/explained/what-are-swell-waves-to-hit-several-coastal-areas-4536792