இன்றே கடைசி தேதி, கட்ட தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பணம் கட்டுவதற்கு linkஐ கிளிக் செய்யவும் என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை பலர் இழந்துள்ளார்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், லேம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மின் கட்டணம் (Electricity Bill) கட்டுவதற்கு இன்றே கடைசி நாள், கட்டத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும், மேலும் பணம் கட்டுவதற்கு கீழே உள்ள linkகை கிளிக் செய்யவும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியை உண்மை என்று நம்பி பணம் கட்டுவதற்கு அதிலிருந்து லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் அவருடைய அக்கவுண்ட் நம்பர், கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் OTP யை அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 30,000 எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இணைய வழி மோசடிக்காரர்கள் அவர் பணத்தை திருடியதை உணர்ந்து பெருமாள், புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இது சம்பந்தமாக இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு.கலைவாணன் I.P.S அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிப்பது என்னவென்றால் இது போன்ற உங்களுக்கு EB bill கட்ட கடைசி தேதி மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரியாத எண்ணிலிருந்து வரும் குறுஞ்செய்தியை முற்றிலும் நம்ப வேண்டாம். இது இணைய வழி மோசடிக்காரர்களின் பணம் பறிப்பதற்கான முயற்சி. மேலும் இதே போன்று கடந்த ஒரு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகின்றோம். ஆகையால் குறுஞ்செய்தியோ அல்லது இணையதளங்களில் வரும் விளம்பரங்களை அதன் உண்மை தன்மையை அறியாமல் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார். புகார் தெரிவிக்க: 1930 மற்றும் www.cybercrime.gov.in-ஐ தொடர்பு கொள்ளவும்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
source https://tamil.indianexpress.com/tamilnadu/electricity-bill-sms-puducherry-cyber-crime-police-alert-4763181