சனி, 31 ஆகஸ்ட், 2024

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது?

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது? என்பது பற்றி கூறுகிறது இந்த செய்தி. 31 08 2024 

தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியே ‘தடம்’. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக ‘ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு’-இன் ‘தடம்’ எனும் முக்கிய முன்னெடுப்பை அறிமுகம் செய்தபோது, அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் “தடம் – தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்” எனும் பெட்டியினை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன்.

மரபை நவீனத்துடன் இணைப்பதன் வழியாக, நமது திறன்மிகு கைவினைக் கலைஞர்களுக்கு உலகளாவிய இயங்குதளத்தையும் வாய்ப்புகளையும் வழங்கி, நமது பண்பாட்டு மரபு பாதுகாக்கப்படுவதையும் வளர்ச்சிபெறுவதையும் ‘தடம்’ உறுதிசெய்யும். நமது பண்பாட்டுப் பெருமையைக் கொண்டாவோம்; முன்னேற்றுவோம்!” எனக் குறிப்பொட்டுள்ளார்.

 

தடம்’ திட்டம்:

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் உருவாக்கப்பட்டது ‘தடம்’ திட்டம். 

பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். 

பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம். 

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :

திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை,
விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள்,
நீலகிரியிலிருந்து  தோடா எம்பிராய்டரி சால்,
பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்,
புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்,
கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு.

source https://news7tamil.live/a-gift-given-by-chief-minister-m-k-stalin-to-american-investors-what-is-in-the-trace-vault.html

சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!

 31 08 2024 

சென்னையில் இன்று #Formula4 கார் பந்தயம் தொடக்கம்!

Formula 4 car race starts today in Chennai

சென்னையில் இரவு நேர பாா்முலா 4 காா்பந்தயம் இன்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் – 31ம் தேதி) மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

இந்நிலையில், 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பார்முலா 4 கார் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது. பந்தயத்தின் பயிற்சி சுற்று, இன்று பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையும், அதன் பிறகு பொழுதுபோக்கு சாகச கார் பந்தயமும் நடைபெறும். இதனை தொடர்ந்து தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். முதன்மை கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நாளை நடைபெறும்.

பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும்.இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 6.05 மணிக்கும், 2- வது போட்டி இரவு 10.05 மணிக்கு தொடங்கும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், ஒவ்வொரு பந்தயமும் 5 ரவுண்டுகளை கொண்டது. ஐ.ஆர். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.


source https://news7tamil.live/formula-4-car-race-starts-today-in-chennai.html

பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும்; ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

 

தமிழக அரசு பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. 

இதனையடுத்து இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ”தமிழகம் உட்பட சில மாநிலங்களில் 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும் (60%). மத்திய அரசின் அந்த பங்களிப்பை பெற ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. 

பி.எம் ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தற்போது நிதி விடுவிக்கப்படாததால் தமிழக பள்ளி கல்வித்துறையில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும்” என ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த நிதியண்டில் வழங்க வேண்டிய 4 தவணை தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.4,305.66 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020ன் மாற்றத்தக்க பலன்களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகளுக்கு உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் .புதிய தேசிய கல்வி கொள்கை 2020 என்பது தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை முழுமையாக ஆதரிக்கிறது. தாய்மொழி மற்றும் பன்மொழியை கற்பிப்பதில் இது உறுதியளிக்கிறது. உலகில் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே பழமையான மொழியாகவும் தமிழ் இருக்கிறது. இது தேசிய பெருமைக்குரியது. தமிழ் மொழியைக் கற்க ஒரு பிரத்யேக சேனல் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி வழிகாட்டலில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டில் உள்ள 14,500க்கும் அதிகமாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு கடந்த 2022 செப்டம்பர் மாதம் பி.எம் ஸ்ரீ திட்டம் தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். தற்போது 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைய கையெழுத்திட்டுள்ளன.

தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதுதொடர்பாக நானும், கல்வித்துறை செயலாளரும் 6 கடிதம் எழுதினோம். இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியது. இது மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அதன்பிறகு திருத்தியமைக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியது. அதன்படி தேசிய கல்வி கொள்கை தொடர்பான குறிப்புகள் கைவிடப்பட்டுள்ளது.

எனவே புதிய தேசிய கல்வி கொள்கை 2020 உடன் இணைந்த சமக்ரா சிக்ஷா அபியானை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிராந்தியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்க வழிவகை செய்யும் பி.எம் ஸ்ரீ திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏற்றுக்கொள்வது முக்கியம். இதனால் பி.எம் ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக கூறியது படி தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dharmendra-pradhan-wrote-letter-to-stalin-tamilnadu-should-sign-pm-shree-schools-scheme-6938605

மேயருக்கு அல்வா கொடுத்த கவுன்சிலர்:

 

trichy Mayar Mj

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக கவுன்சிலர் பொற்கொடி பேசத் தொடங்கினார்.

30 08 2024


அப்போது அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த  ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்து மேயரின் தவாலியிடம் கொடுத்து மேயர் அன்பழகன் இடம் கொடுக்கச் சொன்னார். மேயர் அன்பழகன் அதை வாங்கி திறப்பதற்கு முற்பட்ட அதே நேரம் கவுன்சிலர் பொற்கொடியை பார்த்து எனக்கு மட்டும் ஏன் தனியாக ஸ்வீட் தருகிறீர்கள் என்று கேட்டார். யாரும் எதிர்பாராத திருப்பமாக, பதில் அளித்த கவுன்சிலர் பொற்கொடி எங்கள் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து மாமன்றத்தில் முறையிட்டு வருகிறோம்.

எங்கள் குறைகளை இதுவரை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை, ஆகவே எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே உங்களுக்கு நான் அல்வா தருகிறேன் என்று கூறிவிட்டு மாநகர கூட்ட மன்றத்தை விட்டு வெளியேறினார். கவுன்சிலர் பொற்கொடியின் இந்த பேச்சை கேட்ட மேயர் அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் அப்படியே அதை நகர்த்தி வைத்துவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கூட்டத்தில்  மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு, நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்கா தேவி, பு.ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள்,  உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-trichy-corporation-councillors-meeting-update-in-tamil-6938884

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 6.7 சதவீதமாக சரிவு

 30 08 2024 

farmer wheat

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய நிதியாண்டின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதால், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, விவசாயத் துறையானது 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.7 சதவீதத்திலிருந்து 2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதற்கிடையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த ‘சுரங்கம் மற்றும் குவாரிகளில்’ உற்பத்தி (GVA) முதல் காலாண்டில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/business/indias-q1-gdp-growth-rate-slows-down-to-15-month-low-of-67-6938449

சிவாஜி சிலை உடைந்து விழுந்த விவகாரம்; மன்னிப்புக் பிரதமர்

 மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்கு மன்னிப்புக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மராட்டியப் பேரரசர் சிவாஜி எனக்கும் எனது சகாக்களுக்கும் வெறும் ராஜா மட்டுமல்ல, என்று பால்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றும்போது கூறினார்.

எனக்கும், எனது சகாக்களுக்கும், அனைவருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வெறும் அரசர் மட்டுமல்ல. அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார். எங்களைப் பொறுத்தவரை, அவர் எங்கள் வணக்கத்திற்குரிய தெய்வம்" என்று மோடி கூறினார். “சத்ரபதி சிவாஜி மகாராஜை தங்கள் வணக்கக் கடவுளாக வணங்கும் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன்,” என்று மோடி கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 35 அடி சிவாஜி சிலை ஆகஸ்ட் 26ஆம் தேதி இடிந்து விழுந்தது, மாநில அரசை முகம் சுழிக்க வைத்தது.

“எனது கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. 2013ல், எனது கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியபோது, நான் முதலில் செய்த காரியம் ராய்காட் கோட்டைக்கு சென்றதுதான். நான் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்கு முன்னால் வணங்கி ஆசிர்வாதம் வாங்கினேன்,” என்று 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான வத்வான் துறைமுகத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பால்கரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சிவாஜி சிலை உடைந்து விழுந்துள்ளதால் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். முதலில், கடற்கரையோரம் வீசிய பலத்த காற்றினால் சிலை இடிந்து விழுந்ததாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார். இதற்கிடையில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், இந்த சிலை கடற்படையால் கட்டப்பட்டது, மாநில அரசு அல்ல என்று கூறினார்.

உயர்மட்டத் தலைவர்களின் ஆரம்பப் பதில் பா.ஜ.க.,வின் மத்தியத் தலைமையுடன் ஒத்துப் போகாத நிலையில், 48 மணி நேரத்திற்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே இந்தச் சம்பவத்திற்கு "ஒரு 1,000 முறை மன்னிப்புக் கேட்பதை" பொருட்படுத்தப் போவதில்லை என்றார்.


30 08 2024 

source https://tamil.indianexpress.com/india/in-maharashtra-pm-modi-apologises-for-collapse-of-chhatrapati-shivaji-statue-6938105

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! 30 08 2024 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். ஆகஸ்ட். 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து  விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று (ஆகஸ்ட் – 29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.

சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது அமெரிக்க தொழிலதிபராகவும் உள்ள நெப்போலியன் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 8 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி,

  • கோவையில் ₹150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னையில் GeakMinds நிறுவனத்தின் ஐடி மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் முலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில்  ரூ. 400 கோடி மூதலீட்டில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Ohmium நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னை, தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட AI-இயக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க Applied Materials நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • மதுரையில் ரூபாய் 50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க Infinx நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னை செம்மஞ்சேரியில் ₹250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னையில் Paypal நிறுவனத்தின் AI மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் 1000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதன்படி இதுவரை மொத்தமாக சுமார் ரூ.1600 கோடி முதலீட்டில் 5100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/american-investorsconference-mou-signed-with-8-companies-in-the-presence-of-chief-minister-m-k-stalin.html

இமாச்சலில் பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றம்: அடுத்த மூவ் என்ன?

 HP Marr

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டசபை செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 27) நிறைவேற்றியது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (இமாச்சலப் பிரதேசத் திருத்தம்) 2024, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2006-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் (PCM) திருத்தம் செய்யப்பட்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இமாச்சல பிரதேச சட்டசபை ஏன் மசோதாவை நிறைவேற்றியது?

செவ்வாயன்று சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்த சுகாதார, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானி ராம் ஷண்டில், பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்க குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது அவசியம் என்று கூறினார்.

"இன்றை காலத்தில் இன்னும் சில பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள், இது அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான திறனைத் தடுக்கிறது... கூடுதலாக, பல பெண்கள் இளம் வயது திருமணத்தால் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியவில்லை," என்று அவர் கூறினார்.

மேலும் கூறிய அவர், இளம் வயது திருமணமும் தாய்மையும் பெண்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார். மசோதாவுடன் வழங்கப்பட்ட ‘பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை’யின்படி, “ இளம் வயது திருமணங்கள்... அவர்களின் (பெண்களின்) தொழில் முன்னேற்றத்தில் மட்டுமின்றி உடல் நல ரீதியான வளர்ச்சிக்கும் தடையாகச் செயல்படுகின்றன.” என்றார்.

பி.சி.எம் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள்? 

 "ஆணாக இருந்தால், இருபத்தி ஒரு வயது பூர்த்தியாகாதவர், மற்றும் ஒரு பெண்ணாக இருந்தால், பதினெட்டு வயதை பூர்த்தி அடையாதவர்" பிசிஎம் சட்டத்தின் பிரிவு 2(a) ஒரு "குழந்தை" என வரையறுக்கிறது,

 ஹிமாச்சல் மசோதா, "ஆண்கள்" மற்றும் "பெண்கள்" வயதின் அடிப்படையில் இந்த வேறுபாட்டை நீக்குகிறது. இது "குழந்தை" என்பதை "இருபத்தியோரு வயதை பூர்த்தி செய்யாத ஆண் அல்லது பெண்" என்று வரையறுக்கிறது.

அதாவது, வேறு எந்தச் சட்டம் கூறினாலும், அல்லது திருமணம் செய்து கொள்ளும் நபர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகள் சட்டப்பூர்வ சிறார்களை திருமணம் செய்ய அனுமதித்தாலும், இமாச்சலப் பிரதேசத்தில் பெண்களுக்கு புதிய திருமண வயது அனைவருக்கும் பொருந்தும். இந்த மசோதா பிசிஎம் சட்டத்தில் பிரிவு 18A ஐ அறிமுகப்படுத்துகிறது, இது முழு மத்திய சட்டத்திற்கும் அதன் விதிகளுக்கும் ஒரே மேலான திருத்தத்தை அளிக்கிறது.

மசோதா எப்படி நடைமுறைக்கு வரும்? 

ஒருங்கிணைந்த பட்டியல் - அல்லது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் உள்ள பட்டியல் III - மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சட்டங்களை இயற்றக்கூடிய பாடங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. "திருமணம் மற்றும் விவாகரத்து" உட்பட பல பாடங்களை உள்ளடக்கிய கன்கரண்ட் லிஸ்ட்டின் நுழைவு 5; கைக்குழந்தைகள் மற்றும் மைனர்கள்;... நீதித்துறை நடவடிக்கைகளில் எந்த தரப்பினர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இந்த அரசியலமைப்பு தொடங்குவதற்கு உடனடியாக அவர்களின் தனிப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டது. இதன் மூலம் குழந்தை திருமணத்திற்கு தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டங்களை இயற்ற முடியும்.

இருப்பினும், ஹிமாச்சலப் பிரதேசத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா, பெண்களுக்கு வேறுபட்ட திருமண வயதை அறிமுகப்படுத்துவதன் மூலம் PCM சட்டத்தை திருத்துகிறது, இது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் 254(1) பிரிவின் கீழ், மாநில சட்டமன்றம், ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தைக் கையாள்வதற்கான சட்டத்தை இயற்றினால், அந்தச் சட்டம் மத்திய சட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும். 


source https://tamil.indianexpress.com/explained/himachal-raise-womens-marriage-age-what-happens-next-6935430

4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!

 Tamilnadu school Education fund

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (School Management Committee) கடந்த 2022 ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26 ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10, 17 ஆம் தேதிகளிலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆகஸ்ட் 24 ஆம் தேதியும் எஸ்.எம்.சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து இறுதிக்கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எம்.சி குழுக்கள் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 31) மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் எஸ்.எம்.சி குழுக்கள் மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மண்டல மாநாடு ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டையில் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 31) நடத்தப்பட உள்ளது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் நடத்தப்பட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் தற்போது செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதேநேரம் மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி எஸ்.எம்.சி குழுக்கள் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனுடன் எஸ்.எம்.சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/school-management-committee-restructured-procedure-postponed-4-districts-in-tamilnadu-6936353

மதக் கலவரத்தை உருவாக்கும் பேச்சு: அசாம் முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்

 29 8 24


Himanta cm

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தை மியா முஸ்லிம்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று சர்ச்சைச்குரிய வகையில் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹிமந்தா பிஸ்வா சர்மா மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் இரண்டு வகுப்பினருக்கு இடையே  பகை ஏற்படுத்தும் வகையில்  பேசுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

குவஹாத்தி கிழக்கு டிசிபி மிருணாள் தேகா, திஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டதாகவும், இதுபற்றி புதன்கிழமை மாலை வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி மன்றத்தின் சார்பில் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பூபென் போரா மற்றும் அஸ்ஸாம் ஜதியா பரிஷத் லுரின்ஜோதி கோகோய் ஆகியோர்  காவல்துறையில் புகார் அளித்தனர்.

சுயேட்சை ராஜ்யசபா எம்.பி அஜித் புயான், அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா, காங்கிரஸின் துப்ரி எம்பி ரகிபுல் ஹுசைன் ஆகியோரும் புகார் அளிக்கச் சென்ற தலைவர்களில் அடங்குவர்.

ஆகஸ்ட் 22 அன்று நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அசாமின் பல பகுதிகளில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பதட்டமான சூழல் இருந்து வருகிறது.  இதற்கு மத்தியில் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

சர்மா மற்றும் அவரது அமைச்சர்கள் பலரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பெங்காலி-முஸ்லிம்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் கூறி வருகின்றனர். 

புகார் மனுவில், ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பாஜக தலைவர்கள் பேச்சு மாநிலத்தில் கலவரம் ஏற்படுத்தும் சூழலையும்,  அமைதியின்மையை உருவாக்கும் குற்றவியல் சதியையும்  தூண்டும் வகையில் பேசுகின்றனர். சர்மா, எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர் என்று கூறற்பட்டுள்ளது. 

"மியா" என்பது பெங்காலி-முஸ்லிம்களை குறிவைத்து சொல்லப்படும் இழிவான சொல். எதிர்க்கட்சி புகாரில் கடந்த வாரம் நடந்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் முதல்வர் ஒரு நிருபரை அவரது மத அடையாளம் குறித்து ஸ்வைப் செய்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/opposition-leaders-file-police-complaint-against-assam-cm-6935080

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

#YChromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

 

ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோம்கள் மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் எவ்வாறு மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உயிரியலாளர்கள் ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த குரோமோசோமின் முழுமையான மறைவு என்பது எதிர்காலத்தில் ஆண் சந்ததியின் முடிவைக் குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அப்படி முழுமையாக நாம் நம்பத் தேவையில்லை , அவற்றில் சில நம்பிக்கைகளும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களில் Y குரோமோசோம் என்பது ஆண்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது. Y குரோமோசோம்கள் சிறிய அளவு இருந்தபோதிலும், இது SRY மரபணுவைக் கொண்டுள்ளது. எனவே இது ஆண் பண்புகளை வளர்ப்பதற்கான பாதையைத் தூண்டுகிறது. இந்த மரபணு கருத்தரித்த 12 வாரங்களுக்குப் பிறகு செயல்படுத்தப்படுகிறது. இது டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கி, ஆண்களின் உடல் பண்புகளை வடிவமைத்தல் மற்றும் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.

புகழ்பெற்ற மரபியல் பேராசிரியரும் ஜெனிஃபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸின் கூற்றுப்படி “ கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில், அதன் அசல் 1,438 மரபணுக்களில் 1,393 ஐ இழந்துவிட்டது, 45 மரபணுக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன” என தெரிவித்துள்ளார். மேலும் Y குரோமோசோமின் நேரம் முடிந்துவிட்டதாகவும் இந்த போக்கு தொடர்ந்தால், Y குரோமோசோம் 11 மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் இது ஆண் சந்ததியின் எதிர்காலம் மற்றும் மனித உயிர்வாழ்வு பற்றிய அச்சத்தை எழுப்புவதாகவும் ஜெனிஃபர் ஏ.மார்ஷல் கவலை தெரிவித்துள்ளார்.

இதேபோல நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ஸ்பைனி எலி, அதன் ஒய் குரோமோசோம் மறைந்ததால், புதிய ஆண்களை நிர்ணயிக்கும் மரபணுவை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Y குரோமோசோமின் மறைவு மனித இனப்பெருக்கத்தின் எதிர்காலம் மற்றும் கடுமையான பரிணாம மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. சில ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரிகள் பார்த்தீனோஜெனீசிஸ் மூலம் ஆண் இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றாலும், இது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு  சாத்தியமானதல்ல. ஏனெனில் குறிப்பிட்ட மரபணுக்கள் இரு பெற்றோரிடமிருந்தும் பெறப்பட வேண்டும்.

விஞ்ஞானிகளின் Y குரோமோசோம் குறித்த இந்த ஆராய்ச்சி உயிரியல் மற்றும் இனப்பெருக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்நோக்க உதவுவது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் பின்னடைவு மற்றும் தகவமைப்புத் தன்மை பற்றிய விரிவான விவாதங்களையும் முன்வைக்கிறது.


source https://news7tamil.live/is-the-male-race-coming-to-an-end-study-informs-that-ychromosome-is-disappearing.html

குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையில் மசோதா தாக்கல்!” – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

 

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,  கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தொடர்ந்து இன்று (ஆக. 28) மேற்கு வங்கம் முழுவதும் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மேற்குவங்க பயிற்சி மருத்துவர் விவகாரம் அதிர்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவ மாணவியை நினைவுகூரும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல் துறையிடமிருந்து சிபிஐ வழக்கைப் பெற்று 16 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் இருந்தே நான் அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறேன். சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அடுத்தவாரம் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து, குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளோம்.

இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்புவோம். அவர் மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால், ஆளுநர் மாளிகைக்கு வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம். அவர் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது” என தெரிவித்தார்.


source https://news7tamil.live/bill-to-be-filed-for-death-penalty-for-criminals-within-10-days-mamata-banerjee-action-announcement.html

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணித்த #Rahul Gandhi ! பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!

 

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணிகளிடமும் ஓட்டுநர்கள், நடத்துனர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது சாமானிய மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை என்ன? என்பது குறித்து கேட்பதையும் சிலருக்கு நேரடியாக உதவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு செருப்பு தைக்குள் தொழிலாளி, லாரி ஓட்டுனர், டேக்ஸி ஓட்டுனர் என பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்துள்ளார்.

அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார. இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


source https://news7tamil.live/rahul-gandhi-traveled-in-delhi-city-bus-he-heard-complaints-from-passengers-drivers-and-conductors.html