தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூகவலைதளத்தில் தனியுரிமையினை காக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66இ படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க தேசிய சைபர் கிரைம் உதவி எண் – 1960 அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்!#SAFETY #DIGITAL #AWARENESS #AVAL #CYBERCRIME #HELPLINE PIC.TWITTER.COM/UTM5M53ZAI
— GREATER CHENNAI POLICE -GCP (@CHENNAIPOLICE_) AUGUST 28, 2024
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “அனுமதியின்றி தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம். ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும்! ” என பதிவிடப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/3-years-in-jail-for-publishing-private-pictures-without-permission-greaterchennaipolice-notice.html