திங்கள், 19 ஆகஸ்ட், 2024

பழைய நாணயம் தொடர்பாக பேஸ்புக்கில் வந்த போலி விளம்பரம் : ரூ.44 ஆயிரம் இழந்த நபர்

 sasa

 வில்லியனூரை சேர்ந்த (பெயர் வெளியிடப்படவில்லை) பழைய நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் உடையவர் . சமீபத்தில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் .

என்று வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதை கிளிக் செய்து அதன் உள்ளே சென்று பல்வேறு விவரங்களை தேடி உள்ளார் அவர்களும் மேற்படி நபரை தொடர்பு கொண்டு உங்களிடம் இருக்கின்ற நாணயத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புமாறும் எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும்.

 என்றும் அதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். அதை நம்பிய மேற்படி வில்லியனூரை சேர்ந்த ஆசாமி தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்கள் மூன்றை படம் எடுத்து அவர்களுக்கு பேஸ்புக் மூலமாக அனுப்பி உள்ளார்.

மேற்படி மோசடி நபர்கள் இந்த நாணயங்களை நாங்கள் சோதனை செய்துவிட்டோம். இது 600 ஆண்டுகள் பழமையான நாணயம் ஆகவே ஒவ்வொரு நாணயத்திற்கும் ரூபாய் 5 லட்சம் பணம் தருகிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் கட்டு கட்டாக இருக்கின்ற பணத்தை புகைப்படம் எடுத்தும் வீடியோவாக நேரில் லைவ் செய்துள்ளனர். 

நாங்கள், நீங்கள் இருக்கின்ற இடத்திற்கு வருவதற்கு மூன்று மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மேற்படி வில்லியனூர் நபரை தொடர்பு கொண்டு கோரிமேடு அருகே எங்களை போலீசார் பிடித்து பணம் கேட்கிறார்கள் எங்களிடம் இன்சுரன்ஸ், லைசென்ஸ் ,சரியான ஆவணங்கள் இல்லாததாலும் எங்களுடைய காரில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாலும் இது குறித்து போலீஸ் கண்டுபிடித்து விட்டால் அத்தனையும் போய்விடும்.  எனவே உடனே பணம் அனுப்புங்கள் நாங்கள் வந்து கொடுத்து விடுகிறோம் என்று ரூபாய் 44 ஆயிரத்து 800  பணத்தை மேற்படி வில்லியனூர் நபர் நான்கு தவணைகளாக அனுப்பியுள்ளார் 

வில்லியனூர் ஆசாமி  அவர்களுடைய மொபைல் எண் இருப்பிடத்தை சோதனை செய்தபோது அரியானாவில் இருப்பது தெரியவந்தது .மோசடிக்காரர்கள் பணத்தை கேட்டுக் கொண்டே இருந்ததால் பணம் அனுப்ப மறுத்து விட்டார் . உடனே அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர் அதன் பிறகு அவர்களுக்கு தொடர்பு கிடைக்காததால் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த வில்லியனூரை சேர்ந்த ஆசாமி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார் அது சம்பந்தமாக காவலர்கள் இணைய வழியில் வருகின்ற எதையும் நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இணைய வழி காவல்துறை பொதுமக்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறது இணைய வழி மோசடிக்காரர்கள் இதுபோன்று தினம் தினம் புதுப்புது வழிகளை கையாண்டு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தும் கொள்ளையடித்தும் வருகின்றனர் .ஆகவே இணைய வழியில் வருகின்ற கவர்ச்சிகரமான எந்த விளம்பரங்களையும் நம்பி பணத்தாசையில் பணத்தை மோசடிக்காரர்களுக்கு அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் இணைய வழி காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கை செய்கிறது .

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/tamilnadu/person-losses-money-over-facebook-post-on-old-coins-6867122