ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 tn govt jobs

மதுரை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 12,584

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 625020

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/madurai-social-welfare-department-security-jobs-2024-apply-6922725

Related Posts: