ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

ஆப்ரிக்காவில் வேகமாக பரவிவரும் #Monkeypox – 18,000பேர் பாதிப்பு!

 

ஆப்ரிக்காவில் வேகமாக பரவிவரும் #Monkeypox – 18,000பேர் பாதிப்பு!

18 8 24 

 குரங்கு அம்மை நோயால் ஆப்ரிக்காவில் இதுவரை 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்ரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய்  வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய்த் தாக்குதலால் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  கடந்த 1 வாரத்தில் மட்டும் 1,200 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்ரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று வகைகளில் இந்த வைரஸ் பரவுவதாகவும் அதில் கிளேட் 1 பி வகை உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது.

குரங்கு அம்மை நோயால்  12 ஆப்ரிக்க   உறுப்பு நாடுகளில் சுமார் 3101 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். 15,636 பேர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனையில் இருப்பதாகவும், அதில் 541 பேர் உயிரிழந்து இறப்பு விகிதம் 2.89% பதிவானதாகவும் ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

குரங்கு அம்மை நோய் ஆப்ரிக்காவில் மட்டுமல்ல அதனை கடந்து சுவீடன் மற்றும் பாகிஸ்தானிலும் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசரக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/monkeypox-spreading-rapidly-in-africa-18000-people-affected.html