30 08 2024
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய நிதியாண்டின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதால், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளின்படி, விவசாயத் துறையானது 2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 3.7 சதவீதத்திலிருந்து 2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த ‘சுரங்கம் மற்றும் குவாரிகளில்’ உற்பத்தி (GVA) முதல் காலாண்டில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/business/indias-q1-gdp-growth-rate-slows-down-to-15-month-low-of-67-6938449