/indian-express-tamil/media/media_files/a6I4vgj4rMdEyFcbVd4b.jpg)
என்.சி.பி.ஐ ( National Payments Corporation of India) அண்மையில் யு.பி.ஐ சர்க்கிள் (UPI Circle) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு அக்கவுண்ட் பயன்படுத்தி நண்பர், உறவினர்களை பணம் செலுத்த அனுமதிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/A59Z4xHHaie0whxbmC09.jpg)
குறிப்பாக இந்த அம்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஹோம் மேக்கர்ஸ் மற்றவர்களை சார்ந்து இருக்கும் போது ஒரே அக்கவுண்டை மற்றவருடன் பகிர்ந்து பணம் செலுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2oByaPdRZSxff1LjQzPG.jpg)
எப்படி பயன்படுத்துவது? வங்கி அக்கவுண்ட் வைத்திருப்பவர் ப்ரைமரி யூசர் (ப்ரைமரி யு.பி.ஐ) நபர் ஆவர். இவர் செகன்டரி பயருக்கு (secondary user - நண்பர், உறவினர்கள்) இவருடைய ஐ.டி-யை பகிரலாம். இதற்கு முழுமையாகவும், பகுதியாகவும் ஆக்ஸஸ் தரலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
ப்ரைமரி யூசர் மற்றவருக்கு முழு அனுமதி (Full delegation) தரும் போது செகன்டரி யூசர் பணம் செலுத்தும் போது ப்ரைமரி யூசர் எவ்வித அனுமதியும் தரத் தேவையில்லை. Partial delegation கொடுத்தால் பணம் செலுத்தும் போது ப்ரைமரி யூசருக்கு அனுமதி கேட்டு மெசேஜ் அனுப்படும் அதன் பின்தான் செகன்டரி யூசர் பரிவர்த்தனை செய்ய முடியும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/rbi-reserve-bank-of-india-bloomberg-1200.jpg)
Full delegation என்ற நிலையில் செகன்டரி பயனர் மாதம் ரூ. 15,000 வரை பயன்படுத்த முடியும். இது ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட வசதியாகும்.
source https://tamil.indianexpress.com/technology/how-to-use-upi-circle-new-feature-6900488