ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்… வெடித்து சிதறிய எரிமலை!

 18 8 24 

ரஷ்யாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் எரிமலையும் வெடித்து சிதறியது.

ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், 50 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்திலும் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலடுக்கத்தால் எந்தவித உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,  சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பெட்ரோபாவ்லோஸ்க்-கம்சக்ஷை பகுதியில் இருந்து 450 கி.மீ., தொலைவில் உள்ள ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியது. ஒரே நாளில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பும் அடுத்தடுத்து ஏற்பட்டதால் கம்சட்கா பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


source https://news7tamil.live/the-earthquake-that-shook-russia-the-volcano-erupted.html