தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 29-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியுறவு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 6 மணி வரை இயங்காது.
ஆகஸ்ட் 30-ம் தேதிக்கான அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அன்றைய தினத்தில் நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பொது விசாரணை நேர்காணல் அலுவலகம் ஆகஸ்ட் 30-ம் தேதி மட்டும் செயல்படாது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/passport-seva-portal-will-be-down-for-technical-maintenance-for-three-days-by-mea-6931350