வியாழன், 29 ஆகஸ்ட், 2024

#YChromosome மறைந்து வருவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்!

 

ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோம்கள் மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான Y குரோமோசோம் எவ்வாறு மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உயிரியலாளர்கள் ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த குரோமோசோமின் முழுமையான மறைவு என்பது எதிர்காலத்தில் ஆண் சந்ததியின் முடிவைக் குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அப்படி முழுமையாக நாம் நம்பத் தேவையில்லை , அவற்றில் சில நம்பிக்கைகளும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களில் Y குரோமோசோம் என்பது ஆண்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது. Y குரோமோசோம்கள் சிறிய அளவு இருந்தபோதிலும், இது SRY மரபணுவைக் கொண்டுள்ளது. எனவே இது ஆண் பண்புகளை வளர்ப்பதற்கான பாதையைத் தூண்டுகிறது. இந்த மரபணு கருத்தரித்த 12 வாரங்களுக்குப் பிறகு செயல்படுத்தப்படுகிறது. இது டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கி, ஆண்களின் உடல் பண்புகளை வடிவமைத்தல் மற்றும் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.

புகழ்பெற்ற மரபியல் பேராசிரியரும் ஜெனிஃபர் ஏ. மார்ஷல் கிரேவ்ஸின் கூற்றுப்படி “ கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில், அதன் அசல் 1,438 மரபணுக்களில் 1,393 ஐ இழந்துவிட்டது, 45 மரபணுக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன” என தெரிவித்துள்ளார். மேலும் Y குரோமோசோமின் நேரம் முடிந்துவிட்டதாகவும் இந்த போக்கு தொடர்ந்தால், Y குரோமோசோம் 11 மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் இது ஆண் சந்ததியின் எதிர்காலம் மற்றும் மனித உயிர்வாழ்வு பற்றிய அச்சத்தை எழுப்புவதாகவும் ஜெனிஃபர் ஏ.மார்ஷல் கவலை தெரிவித்துள்ளார்.

இதேபோல நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ஸ்பைனி எலி, அதன் ஒய் குரோமோசோம் மறைந்ததால், புதிய ஆண்களை நிர்ணயிக்கும் மரபணுவை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Y குரோமோசோமின் மறைவு மனித இனப்பெருக்கத்தின் எதிர்காலம் மற்றும் கடுமையான பரிணாம மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. சில ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரிகள் பார்த்தீனோஜெனீசிஸ் மூலம் ஆண் இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்றாலும், இது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு  சாத்தியமானதல்ல. ஏனெனில் குறிப்பிட்ட மரபணுக்கள் இரு பெற்றோரிடமிருந்தும் பெறப்பட வேண்டும்.

விஞ்ஞானிகளின் Y குரோமோசோம் குறித்த இந்த ஆராய்ச்சி உயிரியல் மற்றும் இனப்பெருக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்நோக்க உதவுவது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் பின்னடைவு மற்றும் தகவமைப்புத் தன்மை பற்றிய விரிவான விவாதங்களையும் முன்வைக்கிறது.


source https://news7tamil.live/is-the-male-race-coming-to-an-end-study-informs-that-ychromosome-is-disappearing.html

Related Posts:

  • ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் கிறித்தவ பாதிரிகளை ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறித்தவ பாதிரிகளிடமும், போதகர்களிடமும்விவாதம் செய்து அடுக்கடுக்கான ஆதார… Read More
  • துஆக்கள தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த காண்போம். அல்லாஹும்ம பாஇத் பைனீ அல்லாஹும்ம பாஇத் பைனீ வபை… Read More
  • எச்சரிக்கை மருந்து மாத்திரை விற்பனைக்காகத் தொலைக்காட்சிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மர… Read More
  • முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதைவிடுத்து, அட… Read More
  • கஞ்சத்தனம் கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது… Read More