செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் #MKStalin – எத்தனை நாள் பயணம்? திட்டம் என்ன?

 

இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் #MKStalin – எத்தனை நாள் பயணம்? திட்டம் என்ன? 27 8 24



உலக முதலீடுகளை ஈட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார்.

அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் குறித்த முழுவிவரம் :

  • தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( ஆக – 27ம் தேதி) இரவு 10 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவின் மிக முக்கியமான நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.
  • நாளை (ஆக – 28ம் தேதி) முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
  • ஆகஸ்ட் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ‘இன்வெஸ்டர் கான்கிளேவ்’ என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
  • ஆகஸ்ட் 30ம் தேதி புலம் பெயர் தமிழ்ர்களை சந்தித்து பேசுகிறார்.
  • செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ செல்கிறார். அங்கிருந்தபடி அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை அவர் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு குறித்து அழைப்பு விடுக்கிறார்.
  • சர்வதேச அளவில் சிறப்பாக இயங்கி வரும் பார்ச்சூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுவார்.
  • செப்டம்பர் 7ம் தேதி  சிகாகோ ரிவர் ரோட்டில் உள்ள ரோஸ்மான்ட் அரங்கத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும், ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியான மாபெரும் கலாசார விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
  •  பின்னர் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
source https://news7tamil.live/tamil-nadu-chief-minister-m-k-stalin-will-visit-america-tonight-to-attract-global-investments.html