செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

வங்கக் கடலில் வரும் 29 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

 27 8 24

TN Rains today

TN Rains Today

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் செப். 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 29ம் தேதி வரை மன்னார் வளைகுடாதென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்தென்மேற்குமத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.. மீனவர்கள் இந்த பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம், என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-rains-weather-today-low-pressure-in-bay-of-bengal-6929059

Related Posts: