வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு! 31 07 2024 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் கடந்த 15 நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  தொடர்ந்து கடந்த 29ம் முதல் நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கியது. பின்னர் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சூழலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 1,40,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,75,000 கன அடியாக  அதிகரித்துள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 17-வது நாளாக தடை விதித்துள்ளது.  தொடர்ந்து, கர்நாடகாவில் இருந்து 2.20 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



source https://news7tamil.live/the-flow-of-water-in-the-okanagan-cauvery-river-has-increased-to-1-75-lakh-cubic-feet.html